ADVERTISEMENT

நாகை மாவட்டத்தில் அமைச்சர், ஆட்சியர், எஸ்,பி உள்ளிட்டவர்கள் திட்டமிட்டு சட்டத்தை மீறி செயல்படுகின்றனர்; சிபிஎம் கட்சி கூட்டத்தில் குற்றச்சாட்டு.

01:17 AM Jan 25, 2019 | selvakumar


ADVERTISEMENT

ADVERTISEMENT

நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்டு 32 நாட்கள் சிறையிலடைக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு பாராட்டு விழாநடைப்பெற்றது.

மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள இடத்தில், திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடக்கோரி நவம்பர் 12 அன்று மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்த முயன்றனர். அவர்களை 200 க்கும் மேற்பட்ட காவலர்கள் சுற்றி வளைத்து கடுமையாக தாக்கி 1 பெண் உள்ளிட்ட 23 பேரை கைது செய்து 5 பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடி சிறையிலிருந்து 32 நாட்களுக்கு பிறகு வெளியில் வந்த தோழர்களுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சியை மயிலாடுதுறை சத்தியம் மஹாலில் அக்க கட்சியின் மாவட்ட செயலாளரும், முன்னாள் கீழ்வேளூர் எம்.எல்.ஏ.வுமான நாகை மாலி தலைமையில் நடைப்பெற்றது. சிறை சென்றவர்களின் குடும்பத்தினர் ஏராளமானோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

சிறை சென்றவர்களை பாராட்டிய மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம் , "அரசு மதுபானக் கடைக்கு எதிராக போராடிய 23 தோழர்கள் மீதும் டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடினார்கள் என வழக்கு பதியாமல் பொய்யான வழக்கை பதிந்துள்ளனர். மாவட்டத்தின் அமைச்சரான ஓ.எஸ். மணியன், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உட்பட அனைவரும் இணைந்து திட்டமிட்டு சட்டத்தை மீறி செயல்பட்டுள்ளனர். நீதிமன்றங்கள் உட்பட உழைப்பாளி மக்களுக்கு எதிராகவே தீர்ப்பை எழுதுகின்றன. காவல்துறை செய்ய வேண்டிய வேலையை நீதிமன்றங்கள் செய்வது வேடிக்கையாக உள்ளது. காவல்துறை சொல்வதை அப்படியே நம்பி நீதிபதி செயல்பட்டுள்ளார் அந்த நீதிபதி யோசிக்கவே மாட்டாரா?

பி.எஸ்.தனுஷ்கோடி, ஜீ.வீரய்யன், மணலி கந்தசாமி உள்ளிட்ட கம்யூனிஸ்ட் தலைவர்களின் வரலாற்றை படித்தால் தெரிந்துக்கொள்ளலாம், சித்ரவதைகளை அனுபவிக்கும் கூடமாக சிறைகள் இருந்தன. அவற்றையெல்லாம் மாற்ற கம்யூனிஸ்ட் தலைவர்கள் சிறைக்குள்ளேயே நடத்திய போராட்டங்களின் விளைவாக தான் சிறைகளிலும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி மீண்டும் எழுச்சியான போராட்டத்தை நிரந்தரமாக மூடும் வரை நடத்துவோம். காவல்துறை பொய்யாக பதிந்துள்ள வழக்கை திரும்பபெற வேண்டும்." என பேசிமுடித்தார்.

அதனைத் தொடர்ந்து சிறை சென்ற 23 பேருக்கும் பிணையில் விடுதலையானது குறித்து தீக்கதிரில் வெளிவந்த செய்தியினை நினைவு சின்னமாக வடிவமைத்து ஒவ்வொருவருக்கும் வழங்கினர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT