ADVERTISEMENT

வனக் காப்பாளரை தாக்கிய மர்ம நபர்கள்... தேடுதல் வேட்டையில் அலுவலர்கள்!

03:53 PM Apr 14, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி - சின்னசேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது இந்திலி வனச்சரக அலுவலகம். இங்கு வனக்காப்பாளராகப் பணி செய்துவருபவர் சிவகுமார். இவர், நேற்று மாலை மலைக்கோட்டாலம் என்ற வனப் பகுதியில் ரோந்துப் பணி காரணமாக அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, மலைக்கோட்டாலம் வனப்பகுதியில் புகுந்த அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர், வனப்பகுதியில் இருந்து மணலை அள்ளி அரைமூட்டையாகக் கட்டி கொண்டு சென்று தன் விளைநிலத்தில் சேமித்து வைத்துள்ளார். இதனைக் கண்ட வனக்காப்பாளர் சிவகுமார் இதுபோன்று ஏன் திருட்டுத்தனமாக மணல் அள்ளி சேமித்து வைக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். அப்போது, மணல் அள்ளிய அந்த நபர் உட்பட அங்கிருந்த மேலும் 10 பேர், வனக்காப்பாளர் சிவகுமார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அவர்களிடம் இருந்து தப்பி ஓடிவந்த சிவகுமார், இந்திலி வனச்சரக அலுவலகத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அங்கிருந்து வனச்சரக அலுவலர் கோவிந்தராஜ் தலைமையிலான வனத்துறையினர் மற்றும் அலுவலர்கள் மலைக்கோட்டாலம் பகுதிக்கு விரைந்து சென்று சிவகுமார் மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT