Skip to main content

“இறுதிப்படுத்தியவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” - வட்டக்குழு செயலாளர் கோரிக்கை!

Published on 30/10/2021 | Edited on 30/10/2021

 

Departmental action should be taken against the finalists

 

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின், கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டக்குழு செயலாளர் அ. சுப்பிரமணியன் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் குறிப்பிட்ட கோரிக்கைகள் பின்வருமாறு.. ‘கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பேரூராட்சியில் கல்லை மெயின் ரோட்டில் உள்ள பட்டாசு கடையில் தீவிபத்து ஏற்பட்டது. அதில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ. 20 லட்சம் மற்றும் படுகாயமடைந்தவர்களுக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம், உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும்.

 

பாதுகாப்பு விதிமுறைகளை மீறியும், அரசு விதிகளை முறையாக கடைப்பிடிக்காமலும் முருகன் ஸ்டோர்ஸ் செல்வகணபதிக்கு பட்டாசு கடை விற்பனை உரிமம் வழங்கி முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து அவர்களைப் பணி நீக்கம் செய்யுமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சங்கராபுரம் வட்டக்குழு சார்பில் கேட்டுக்கொள்கிறேன். மேலும், பட்டாசு கடை வெடித்த இடத்தின் அருகில் இருந்த கடைகள் மற்றும் எதிர்ப்புற கடைகளின் சுவர்கள், மேற்கூரைகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. இந்நிலையில், தீபாவளிக்கு விற்பனைக்கு வைத்திருந்த துணிகளும் சேதமாகி பெருத்த நட்டம் ஏற்பட்டுள்ளது. அதோடு அந்த இடத்தின் கட்டட உரிமையாளர்களுக்கும், கடைகளின் வாடகைதாரர்களுக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்பிற்கும் தமிழ்நாடு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

 

பொதுமக்கள் மற்றும் வழிபாட்டுத் தலம் உள்ள இடத்தில் பட்டாசு கடை நடத்திட உரிமம் வழங்கி அனுமதி அளித்த காவல்துறை, தீயணைப்புத்துறை, வருவாய்த்துறையினர், இந்த இடத்தை தேர்வுசெய்து ஆய்வில் விற்பனை செய்யலாம் என்று இறுதிப்படுத்தியவர்கள் மீது துறை ரீதியான விசாரணை மேற்கொண்டு விபத்திற்கும், மரணங்களுக்கும் அவர்களைப் பொறுப்பேற்க வைத்து அவர்களின் மீதும் நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.  இதுபோன்ற விபத்துகள் நடந்து அதனால் உயிரிழப்புகள் ஏற்பட்டால் அரசு நிவாரணம் வழங்குவதை ஒரு நடைமுறையாக கொண்டிருக்காமல், பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் ஏற்கனவே நடப்பில் உள்ள விதிமுறைகளில் பட்டாசு கடை விற்பனையாளர்களுக்காக எந்தவிதமான தளர்வுகளும் வழங்காமல் அரசு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து பட்டாசு விற்பனை உரிமங்களை வழங்கக் கோருகிறேன்.

 

தற்போது தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு சில தினங்களே உள்ள நிலையில், நடப்பில் உள்ள நிரந்தர பட்டாசு விற்பனையாளர்கள் மற்றும் தற்காலிக பட்டாசு விற்பனையாளர்களுக்குப் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த வழிகாட்டுதலை உயர் அதிகாரிகளின் தலைமையில் வழங்குமாறும் கேட்டுக் கொள்கிறேன். மேற்கண்ட தீ விபத்தில் உயிரிழந்த குடும்ப உறுப்பினர்களுக்கும், பலத்த காயமடைந்தவர்களுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆறுதலை தெரிவிப்பதோடு, நேர்மையான விசாரனையை மேற்கொள்ள தமிழ்நாடு அரசின் சார்பில் உயர்மட்ட விசாரணைக்குழு அமைக்குமாறும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சங்கராபுரம் வட்டக்குழு சார்பில் கேட்டுக்கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024

 

கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெய்கணேஷ், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், சிபிஐ, சிபிஎம், முஸ்லீம் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் வந்தனர். 

அதேபோல் அதிமுக மாவட்டச் செயலாளரும் வேட்பாளருமான குமரகுரு கூட்டணி கட்சியான தேமுதிக நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் அதிகாரி ஷரவண்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக, அதிமுக கட்சி வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்ததால் இரு கட்சி மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் கூட்டம் கள்ளக்குறிச்சி நகரில் நிரம்பி வழிந்தது.

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை. ரவிக்குமார் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவரும் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பழனியிடம் வழங்கினார். ரவிக்குமாருடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் குலாம் மொய்தீன் உட்பட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர். 

அதேபோல் பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கர் பாமக மற்றும் பிஜேபி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இவரைத் தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட மாணவர் அணி செயலாளர் காந்தலவாடி பாக்யராஜ், அதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகம், தேமுதிக மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். 

Next Story

அறந்தாங்கியில் பயங்கர தீ விபத்து! - நகைக்கடை, பாத்திரக்கடை எரிந்து சேதம்!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
 fire broke out at a firecracker shop in Aranthangi

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சந்தைப்பேட்டை சாலையில் உள்ள நகைக்கடை மற்றும் பட்டாசுக் கடையில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீயானது பாத்திரக் கடைக்குப் பரவி அருகே உள்ள கடைகளுக்கும் பரவத் தொடங்கியுள்ளதால் தீயை அணைக்கும் பணியில் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் உள்ளிட்ட தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், தீபாவளிக்கு விற்பனை செய்து மீதமுள்ள பட்டாசுகளை குடோனில் வைத்திருந்தனர். அந்த பட்டாசுகளும் வெடித்து தீயை மேலும் பரவச் செய்துள்ளன. நகைக்கடையில் உள்ள தங்க நகைகள், பாத்திரக் கடையில் உள்ள பல லட்சம் மதிப்பிலான அலுமினியம், பித்தளை, எவர்சில்வர் மற்றும் பிளாஸ்டிக் பாத்திரங்கள் எரிந்து சேதமடைந்துள்ளன. தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கப் போராடி வருகின்றன.

அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து அறந்தாங்கி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.