ADVERTISEMENT

"இன்னும் பல சீசன்களில் டோனி விளையாட வேண்டும்"- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

07:02 PM Nov 20, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

2021 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பாராட்டு விழா இன்று (20/11/2021) மாலை 05.30 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அதேபோல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி, ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல், பி.சி.சி.ஐ.யின் செயலாளர் ஜெய் ஷா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் என்.சீனிவாசன், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் தமிழ்நாடு அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "டோனியின் சொந்த மாநிலம் ஜார்கண்ட் என்றிருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் செல்லப் பிள்ளையாகிவிட்டார். எப்போதும் இலக்குதான் முக்கியம்; இலக்கு அடைய உழைப்புதான் மிக மிக முக்கியம். அணியின் பாராட்டு விழாவுக்கு தோனியின் ரசிகராக வந்துள்ளேன். எனது தந்தை கருணாநிதி, எனது பேரப்பிள்ளைகள் என எல்லோரும் தோனியின் ரசிகர்கள் தான். சென்னை என்றாலே சூப்பர்தான்; மீண்டும் ஒரு முறை அது நிரூபிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 நாட்களாக பெய்து வரும் மழைக்கான நிவாரணப் பணிகள் பற்றித்தான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். கோட்டையில் இருந்தாலும் குடிசைகள் பற்றி நினைக்க வேண்டும் என கருணாநிதி எங்களை ஆளாக்கியுள்ளார். எனக்கும் கிரிக்கெட் போட்டிகளில் ஆர்வம் உண்டு; நானும் விளையாடியுள்ளேன். தமிழர்கள் பச்சை தமிழர்கள் என்றால் டோனி மஞ்சள் தமிழர். டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது.

டோனியின் ஹெலிகாப்டர் ஷாட் யாராலும் மறக்க முடியாது; அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உண்டு. டெண்டுல்கருக்கு பிறகு கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் டோனிதான். சாதாரண பின்புலத்துடன் உச்சம் தொட்ட டோனி ஒவ்வொரு தமிழரின் மனதிலும் இருக்கிறார். நீங்கள் உங்கள் விளையாட்டைத் தொடருங்கள்; நாங்கள் எங்கள் மக்கள் பணியைத் தொடருகிறோம். ஐபிஎல் போட்டிகளில் இன்னும் பல சீசன்களில் டோனி விளையாட வேண்டும்." இவ்வாறு தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT