ADVERTISEMENT

''நெஞ்சமும் நொறுங்கிவிட்டது... ஆனால் இதில் ஒரே ஆறுதல்...''-தமிழிசை பேட்டி!

12:37 PM Dec 09, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் நேற்று 08/12/2021 பிற்பகல் விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் பிபின் ராவத்தோடு பயணித்த அவரது மனைவி மதுலிகா ராவத், 11 இராணுவ அதிகாரிகளும் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் இந்திய விமானப் படை சார்பில் அறிவிக்கப்பட்டது. நாட்டையே சோகத்திற்குள்ளாக்கியுள்ளது இந்த துயர நிகழ்வு.

வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் வைக்கப்பட்டுள்ள 13 பேரின் உடலுக்கு ராணுவ மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். அதேபோல் தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரியின் துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் நேரில் அஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, ''நெஞ்சம் அடைக்கிறது. பிபின் ராவத் உடலோடு அத்தனை ராணுவ வீரர்களின் உடலுக்கும் அஞ்சலி செலுத்திவிட்டு வந்திருக்கிறேன். அவர்களை இந்த நிலையில் பார்ப்போம் என்று நாம் நினைக்கவில்லை. இந்த நாட்டுக்கு சேவை செய்வதுதான் அவர்களுக்கு நாம் செய்யும் அஞ்சலி. முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் ஒவ்வொரு அணுவும், ஒவ்வொரு நொடியையும் இந்த நாட்டிற்காகச் செலவு செய்திருக்கிறார். ஹெலிகாப்டர் நொறுங்கி அவர் உயிரிழந்துவிட்டார் என்ற செய்தி நெஞ்சையே நொறுக்கிவிட்டது. அதனால்தான் ஓடோடி வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தலாம் என வந்திருக்கிறேன். உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் கேப்டன் வருணை பார்த்துவிட்டு வந்திருக்கிறேன். மருத்துவர் என்ற வகையில் ஒரு ஆறுதல் அவருடைய முக்கிய உறுப்புகள் எல்லாம் நன்றாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. இப்பொழுது இருக்கும் ஒற்றை பிரார்த்தனை அவர் பிழைக்க வேண்டும் என்பதுதான்'' என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT