ADVERTISEMENT

முதலமைச்சர் கோரிக்கையை பிரதமர் ஏற்க வேண்டும் -முத்தரசன் வேண்டுகோள்!

04:55 PM Mar 30, 2020 | Anonymous (not verified)

சமூக வாழ்வின் பெரும் சவலாக கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவி வருவதைத் தடுக்க, தமிழ்நாடு அரசு அனைத்து முனைகளிலும் செயலாற்றி வருகின்றது. சில நிவாரண உதவிகள் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.

ADVERTISEMENT


கொரானா வைரஸ் தொற்று நோய் பரவி வரும் பேரபாயம் முன்னர் மதிப்பிட்டதை விட கடுமையான அளவில் இருப்பதை உணர முடியும் என்று கூறியுள்ளார் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்.

ADVERTISEMENT

அவர் மேலும், கொரானா வைரஸ் தொற்று நோய் பரவி வருவதைத் தடுக்க சமூக இடைவெளி வைத்தல் நடவடிக்கை எடுத்த மத்திய அரசு முதலில் 21.03.2020 ஆம் தேதி ஒரு நாள் மக்கள் சுய ஊரடங்கு நடவடிக்கையை மேற்கொண்டது. தொடர்ந்து 24.03.2020 ஆம் தேதி முதல் 14.04.2020 வரையான 21 நாட்கள் நாடு முழுவதையும் முடக்கியுள்ளது.


இந்தக் காலகட்டத்தில் மக்கள் வாழ்க்கை நெருக்கடிக்கு உதவும் வகையில் சில நிவாரண உதவிகளை மத்திய அரசும் அறிவித்துள்ளன.

தொழிலகங்கள், வணிக நிறுவனங்கள், சேவைத்துறைகள் என எல்லாப்பிரிவுகளும் மூடப்பட்டுள்ளன. ஏற்கனவே நிலவி வந்த பொருளாதாரத் தேக்கத்தை, கொரானா வைரஸ் தொற்று தடுப்பு காலம் மேலும் தீவிரமாக்கி நெருக்கடியாக வளரும் என்பதை மத்திய அரசு கருத்தில் கொள்ள வேண்டும். இந்தச் சூழலில் தமிழ்நாடு முதலமைச்சர் முன்னர் 25.03.2020 ஆம் தேதி கடிதத்தில் கோரியுள்ள ரூபாய் 4 ஆயிரம் கோடி கோரியுள்ளார்.


கள நிலவரத்தின் தீவிரம் அறிந்த பின்னர் 28.03.2020 ஆம் தேதி கடிதத்தில் மேலும் ரூபாய் 9 ஆயிரம் கோடி கோரியுள்ளார்.


தமிழ்நாடு முதலமைச்சர் இரு கடிதங்களில் கோரியுள்ள ரூபாய் 13 ஆயிரம் கோடியை மத்திய அரசு உனடியாக தமிழகத்திற்கு வழங்கி கொரானா வைரஸ் நோய் தொற்று தடுப்பு மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளுக்கு உதவுமாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.


இது தவிர மாநில அரசு கடன் வாங்கும் அளவுக்கு அனுமதி வழங்குவது, மாநிலங்களுக்கு சிறப்பு மானியம் வழங்குவது போன்ற கோரிக்கைளை தாமதமின்றி மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மத்திய அரசையும், பிரதமர் நரேந்திர மோடியையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT