Skip to main content

சிபிஐ மாநிலம் தழுவிய பிரச்சார பயணம் - வேதாரண்யத்தில் இரா.முத்தரசன் துவக்கி வைத்தார்

Published on 18/09/2018 | Edited on 18/09/2018
cpi

 

மத்தியில் ஆட்சி செய்து வரும் மோடி அரசால் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் வகுத்தளித்த பேச்சுரிமை, எழுத்துரிமை, கூட்டம் கூடும் உரிமை, சட்டத்தின் முன் அனைவரும் சமம், தீண்டாமை ஒழிப்ப, கல்வி, வேலை வாய்ப்பில் சம உரிமை, ஜாதி, இனம், மதம், பாலினம் சார்ந்த வேறுபாடின்மை அனைத்தும் நசுக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவின் இயற்கை வளங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வேளாண்மை, வணிக நிறுவனங்கள், கைத்தறி உள்ளிட்ட சிறு குறு தொழில்கள் அனைத்தும் திட்டமிட்டு அழிக்கப்படுகிறது.

 

cp2


கூட்டாட்சி தத்துவத்தை குழி தோண்டி புதைக்கும்  வகையில்  மத்திய  அரசின் அத்துமீறிய தலையீடு, அதற்கு துணை போகும் தமிழக எடப்பாடி அரசின் நிர்வாக திறமையின்மையால் அனைத்து துறைகளிலும் அதிகரித்து வரும் லஞ்சம், ஊழல் போன்ற கொடுமைகளுக்கு முடிவு கட்டிட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், ஏ.ஐ.டி.யூ.சியும் இணைந்து  "அசியல் சட்டத்தை பாதுகாப்போம், இந்தியாவை பாதுகாப்போம்"  என்ற  கொள்கை முழக்கத்தை முன் வைத்து செப்டம்பர் 17 முதல் 23 வரை தமிழ்நாடு தழுவிய பிரச்சாரம் இயக்கம் இன்று ஐந்து முனைகளில் தொடங்கியது.  சென்னையில் மூர்த்தி  தந்சை வேதாரணியத்தில் கோ. பழனிச்சாமி,  குமரி வீரபாண்டியன், தூத்துக்குடி குணசேகரன், வேலூர் ஆறுமுகம், பாண்டிச்சேரி விஸ்வநாதன் என ஐந்து இடங்களிலிருந்து இன்று பிரச்சார பயனம் தொடங்கியது    23ம் தேதி திருப்பூரில் மாபெரும் பொதுக்கூட்டத்துடன் பிரச்சாரம் இயக்கம் நிறைவு பெற உள்ளது.

 

cp00


இந்த பிரச்சார இயக்கத்தினை  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வேதாரண்யம் அகஸ்தியம்பள்ளியில் துவக்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து வேதாரண்யம் ராஜாஜி பூங்காவில் வரவேற்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

 

சார்ந்த செய்திகள்