ADVERTISEMENT

முத்தலாக்... முதல் வழக்கு... 6 பேர் மீது பாய்ந்தது

12:04 PM Oct 04, 2019 | kalaimohan

மத்திய அரசு முத்தலாக் சட்டம் கொண்டு வந்தபோது பயங்கரமான எதிர்ப்புகள் கிளம்பியது. எதிர்ப்புகளை மீறி சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த நிலையில் முத்தலாக்கின் முதல் வழக்கு புதுக்கோட்டையில் பதிவாகி உள்ளது.

புதுக்கோட்டை திருவள்ளுவர் நகர் 1 ம் வீதியை சேர்ந்தவர் ஷேக்அப்துல்லா. இவரது மனைவி ரிஸ்வானா பேகம்(25). இவர்களுக்கு கடந்த 30.1.2017 அன்று க்ரீன் பேலஸ் மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. அப்போது 70 பவுன் தங்க நகை, ரூ 1 லட்சம் பணம் சீர்வரிசைகளும் கொடுக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு சஹர்லினா (எ) சஹ்ரா பானு என்ற 2 வயதில் மகள் உள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்நிலையில் இவர்களுக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு பிப்ரவரி முதல் நாளில் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் 2 ந் தேதி புதுக்கோட்டை பைத்துல் மால் ஜமாத்தில் இரு தரப்பினரும் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு கிட்டவில்லை. அதனால் கணவர் சாலையில் வைத்து முத்தலாக் சொல்லிவிட்டு சென்றுவிட்டார் என்றும் விரைவில் வெளிநாடு தப்பிச் செல்ல உள்ளதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதற்கு உடந்தையாக இருந்த மாமனார் , மாமியார் நாத்தனார், மூத்த மருமகள் உள்பட 6 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

புகாரின் பேரில் ஷேக்அப்துல்லா உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த மொத்தம் 6 பேர் மீது முத்தலாக் தடைச் சட்டம் உட்பட 4 பிரிவுகளின் கீழ் புதுக்கோட்டை மகளிர் காவல்நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. மதமாற்றத் தடைச் சட்டம் வந்தபோதும் முதல் வழக்கு புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில்தான் பதிவானது அதேபோல முத்தலாக் சட்டத்தின் முதல் வழக்கும் புதுக்கோட்டையில் தான் பதிவாகி உள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT