ADVERTISEMENT

சந்தனக்கூடு விழாவில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகை!

11:06 AM Jan 04, 2024 | ArunPrakash

ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை வக்கீல் தெருவில் அமைந்துள்ள ஹஸ்ரத் சையத் குட்லஷா ரஹ்மத்துல்லாஹி அவுலியா தர்காவில் மத நல்லிணக்கத்தை போக்கும் வகையில் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக இருக்க வேண்டுமென ஆண்டுதோறும் நாகூர் ஆண்டவர் பண்டிகையை முன்னிட்டு 134-ஆம் ஆண்டு கொடி ஏற்றுதல் மற்றும் சந்தனக்கூடு உருஸ் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

ADVERTISEMENT

அந்த வகையில் இந்த ஆண்டும் நாகூர் ஆண்டவர் பண்டிகையை முன்னிட்டு ஹஸ்ரத் அவுலியா தர்காவில் விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு திருவிழா நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் வீதியில் வான வேடிக்கையுடன் பல்வேறு வாசனை மல்லிகை பூக்களாலும் ஜிகினா மலர்களாலும் ஜொலித்த சந்தனக்கூடத்தை குதிரை வாகனத்தில் வைத்து வீதிகளின் வழியாக ஊர்வலமாக புறப்பட்டு தர்காவை வந்தடைந்தனர்.

ADVERTISEMENT

இதனைத்தொடர்ந்து ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட சந்தனக்கூடத்தை இஸ்லாமியர்கள் தலையில் சுமந்தவாறு தர்காவின் முன்பாக மேளதாளங்கள் முழங்க அல்லா தொழுகை பாடல்களை பாடியபடி உள்ளே எடுத்துச் சென்று ஹஸ்ரத் சையத் குட்லஷா ரஹ்மத்துல்லாஹி அவுலியா சமாதியில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு சந்தனம் பூசும் நிகழ்வு நடைபெற்றது.

பின்னர் தர்காவில் கூடியிருந்த இஸ்லாமிய பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என அனைவரும் சந்தனத்தை நெற்றியில் வைத்து வணங்கினர். நடைபெற்ற சந்தனக்கூடு விழாவில் உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு விடிய விடிய தூங்காமல் கண் விழித்து அல்லாவை வழிபட்டு சென்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT