/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/993_281.jpg)
கேரளாவைச் சேர்ந்த ரகுமான் என்ற இளைஞர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ரகுமானின் இதயத்தில் வாழ்வுகள் அடைக்கப்பட்டுச் செயலிழந்து இறுதிக்கட்டத்தில் உள்ளதாகத் தெரிவித்தனர். மேலும் ரகுமான் உயிர் பிழைக்க இதயமாற்று அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே அவர் உயிர்பிழைக்க வாய்ப்பிருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் விபத்தில் சிக்கி மஞ்சுளா என்ற பெண் மூளைச்சாவு அடைந்தார். அதனைத் தொடர்ந்து மஞ்சுளாவின் உடல் உறுப்புகளைத் தானமாக அளிக்க முன்வந்தனர். இதனைத் தொடர்ந்து தனியார் மருத்துவர்கள் ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு விரைந்து அரசு மருத்துவர்கள் உதவியுடன் மஞ்சுளாவின் இதயத்தை அறுவை சிகிச்சை மூலம் எடுத்துக்கொண்டு ஆம்புலன்ஸ் மூலம் 50 நிமிட அதிவேக பயணத்தில் கோவை மருத்துவமனைக்கு வந்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/993-pon_56.jpg)
இதனைத் தொடர்ந்து மஞ்சுளாவின் இதயத்தைக் கொண்டு, ரகுமானுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாகச் செய்யப்பட்டது. 50 மேற்பட்ட மருத்துவர்கள் இதய மாற்று அறுவை சிகிச்சை ஈடுப்பட்ட நிலையில், தற்போது ரகுமான் இயல்பு நிலைக்கு துரும்புள்ளார். இதனைப் பார்த்த அவரது குடும்பத்தினர் மருத்துவர்களுக்கும், மஞ்சுளா குடும்பத்திற்கும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)