ADVERTISEMENT

ஊதியம் வழங்காததை கண்டித்து நகராட்சி தற்காலிக பணியாளர்கள் தர்ணா

02:59 PM Oct 08, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஈரோடு மாநகராட்சி 4 மண்டலத்தில் சுமார் 300 -க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.இதில் 100 பேர் நிரந்தர பணியாளர்களாகவும் மீதம் உள்ள 200க்கும் மேற்பட்டோர் தற்காலிக பணியாளர்களாகவும் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் 4-ம் மண்டல அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தூய்மை பணிகளில் ஈடுபடுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்களில் நிரந்தர பணியாளக்குக்கு மாத மாதம் 1ம் தேதி முதல் 10 தேதிக்குள் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்காலிக தினக்கூலி பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் வேண்டுமென்ற அதிகாரிகள் தாமதம் செய்து வருவதாகவும் அதன் காரணமாக தற்காலிக பணியாளர்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் கூறி ஈரோடு மூலப்பாளையத்தில் உள்ள மாநகராட்சி 4-ம் மண்டல அலுவலகம் முன்பு தற்காலிக பணியாளர்கள் 100- க்கும் மேற்பட்டோர் பணிகளைப் புறக்கணித்து தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த சில மாதங்களாகவே ஊதிய வழங்குவதில் தாமதம் ஏற்படுத்தி வருவதாகவும் அதன் காரணமாக தற்காலிக பணியாளர்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் உடனடியாக தாமதம் செய்யாமல் ஊதியத்தை வழங்க வேண்டும் என்றும் மேலும் ஊதியம் வழங்குவதில் ஏற்பட்டு உள்ள குளறுபடிகளை களைய வேண்டும் என்றும் கேட்டுக்க கொண்டனர்.மேலும் வரும் செவ்வாய் கிழமை அன்று ஈரோடு மாநகராட்சி அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT