ADVERTISEMENT

எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் தமிழ் பெண் முத்தமிழ்செல்வி! 6 கண்டங்களில் உள்ள சிகரங்களே இலக்கு எனப் பேட்டி!

10:22 PM May 30, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

விருதுநகர் மாவட்டம் ஜோயல்பட்டியைச் சேர்ந்த முத்தமிழ்செல்விக்கு (34 வயது) திருமணமாகி இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள மண்ணிவாக்கத்தில் தங்கியிருக்கின்றனர். அங்கு ஜப்பான் மொழி பயிற்றுவிப்பாளராக முத்தமிழ்செல்வி இருந்து வந்தார். தானும் சாதிக்க வேண்டும் என்றெண்ணி பல்வேறு மலைகளில் ஏறியும் இறங்கியும், வில்வித்தையில் ஈடுபட்டும், பல சாதனைகளைப் புரிந்து வந்தார்.

இதனைத் தொடர்ந்து, எவரெஸ்ட் சிகரத்தை ஏறி அடைவதற்கான பயிற்சி மேற்கொண்டார். ஆனால் பொருளாதார வசதியில்லாமல் தவித்தார். இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து ரூ.10 லட்சம் அரசு சார்பில் உதவி வழங்கினார். மேலும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ.15 லட்சத்தை தன் சார்பாகக் கொடுத்து உதவினார்.

இதனையடுத்து, எவரெஸ்ட் மலயில் ஏறிய முத்தமிழ்செல்வி, கடந்த 23ம் தேதி எவரெஸ்ட் சிகரத்தில் 8,848.86 மீட்டர் உயரத்தை அடைந்து சாதனை படைத்தார். தமிழ்நாட்டிலிருந்து எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய முதல் பெண்ணாக முத்தமிழ்செல்வி சாதனை படைத்துள்ளார். இவரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி வாழ்த்தியிருக்கிறார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT