ADVERTISEMENT

திமுக அமைச்சரா... அதிமுக எம்எல்ஏவா - இடைத்தேர்தலில் சாதித்த எம்ஆர்கே!

09:48 PM Oct 12, 2021 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சிதம்பரம் அருகே உள்ள குமராட்சி ஒன்றியத்தில் 19-ஆவது ஒன்றியக்குழு உறுப்பினர் வார்டுக்கு உள்ளாட்சி இடைத்தேர்தல் கடந்த 9-ஆம் தேதி நடைபெற்றது. இதில் திமுக சார்பில் தற்போதைய வேளாண்துறை அமைச்சர் பன்னீர் செல்வம் ஆதரவு பெற்று திமுக குமராட்சி ஒன்றிய செயலாளர் சங்கர் போட்டியிட்டார். அதேபோல் அதிமுக சார்பில் தற்போதைய சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ பாண்டியனின் ஆதரவு பெற்று அதிமுக குமராட்சி ஒன்றிய செயலாளர் சுந்தரமூர்த்தி போட்டியிட்டார்.

கடலூர் மாவட்டத்தில் 5 ஒன்றிய கவன்சிலர் பொறுப்பிற்குத் தேர்தல் நடந்தாலும் குமராட்சியில் உள்ள இந்த 19-வது வார்டின் வெற்றியைக் கடலூர் மாவட்டம் அல்லாமல் தமிழக அளவில் எதிர்பார்க்கப்பட்டது. என்னவென்றால் திமுக அமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக எம்எல்ஏவாக சிதம்பரம் தொகுதியில் இருமுறை இருக்கும் பாண்டியனின் சொந்த ஊர் என்பதால் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இந்நிலையில் அதிமுக வேட்பாளரை வெற்றிபெற வைப்பதில் பாண்டியன் தீவிரமாகச் செயல்பட்டார். அதேபோல் வேளாண் அமைச்சரும் பிரச்சாரம் மேற்கொண்டு வெற்றிக்கு என்ன செய்யவேண்டுமோ அதனைச் செய்துகொண்டு இருந்தார்.

இது இருதரப்பிற்கும் கடும் போட்டியை ஏற்படுத்தி மாவட்டத்தில், கட்சியினர் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் 12-ந்தேதி வாக்கு எண்ணிக்கை குமராட்சி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மொத்த பதிவான 4149 வாக்குகளில் திமுக வேட்பாளர் சங்கர் 2041 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதேபோல் அதிமுக வேட்பாளர் சுந்தரமூர்த்தி 1860 வாக்குகள் பெற்றுத் தோல்வியடைந்தார். பாமக வேட்பாளர் சசிக்குமார் 134 வாக்குகள் மட்டுமே பெற்றார். திமுக வேட்பாளரின் வெற்றியை அறிந்த திமுகவினர் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வெளியே திமுக அமைச்சர் பன்னீர்செல்வத்தின் பெயரை உச்சரித்தவாறு வெடிவெடித்து வெற்றியைக் கொண்டாடினார்கள். பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் கலையரசன், குமராட்சி ஒன்றிய செயலாளர் ரஜேந்திரகுமார், ஒன்றிய பொறுப்பாளர் மஞ்சு உள்ளிட்ட நிர்வாகிகள் சங்கருக்குச் சால்வையை அணிவித்து வாழ்த்துகளைக் கூறினார்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT