ADVERTISEMENT

மர்ம விலங்கு கடித்து 50க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழப்பு; கலக்கத்தில் சித்தோடு மக்கள்

07:15 PM Apr 15, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஈரோட்டில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சித்தோடு. அந்த சித்தோடு அருகே மர்ம விலங்கு கடித்ததில் 4 ஆடுகள் பலியுள்ளது. தொடரும் இந்த சம்பவங்களால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே தயிர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடாசலம். விவசாயியான இவர் தனது தோட்டத்தில் ஆட்டு பட்டியில் ஆடுகளை வளர்த்து வந்தார். நேற்று இரவு ஆட்டுப்பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளில் 4 ஆடுகள் மர்ம விலங்கு கடித்ததில் பரிதாபமாக இறந்தன. நேற்று முன்தினம் அதேபகுதியில் செந்தில்குமார் என்பவரின் 7 ஆடுகள் இதேபோல் மர்ம விலங்கு கடித்ததில் பரிதாபமாக இறந்தன. அடுத்தடுத்து இருதினங்களில் 11 ஆடுகளை மர்ம விலங்கு கடித்து கொன்றது அப்பகுதி மக்களிடம் பீதியை ஏற்படுத்தியது. இதுகுறித்து சித்தோடு போலீசாரும்,வனத்துறையினரும் விசாரணை நடத்துகின்றனர்.

கூட்டமாகச் சுற்றித் திரியும் நாய்கள் கடித்ததா அல்லது வேறு ஏதேனும் விலங்குகள் நடமாட்டம் உள்ளதா எனவும் விசாரணை செய்து வருகின்றனர். கடந்த மாதம் இதே பகுதியில் மர்ம விலங்கு கடித்து 50க்கும் மேற்பட்ட ஆடுகள், கோழிகள் உயிரிழந்தன. அப்போது வனத்துறையினர் கண்காணிப்பு கேமரா பொறுத்தி கண்காணித்தனர். சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கிராமத்தினர் கூறி இருந்தனர். ஆனால் கண்காணிப்பு கேமராவில் அப்போது தெளிவான உருவம் பதிவாகவில்லை. ஒரு மாத காலத்திற்குப் பின் மீண்டும் ஆடுகளை மர்ம விலங்கு வேட்டையாடி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT