ADVERTISEMENT

இன்று முதல் 5ஜி-தொடங்கி வைக்கிறார் மோடி

09:32 AM Oct 01, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

அதிவேக இணைய சேவையான 5ஜி சேவையைப் பொறுத்தவரையில் அலைகற்றை ஏலம் அனைத்தும் முடிந்து விட்டன. 5ஜி அலைகற்றை அதிகளவில் வாங்கி ஜியோ நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து, ஏர்டெல் நிறுவனம் இரண்டாம் இடத்தில் உள்ளது. மேலும், குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட்போனைக் கொண்டு வருவதற்கு முழு முயற்சியில் ஜியோ நிறுவனம் களம் இறங்கியுள்ளது.

இந்த நிலையில், அதிவேக இணைய வசதியை வழங்கவுள்ள 5ஜி தொழில்நுட்பம், இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரும் என மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இதற்காக, டெல்லியில் பிரகதி மைதானத்தில் இன்று பிரதமர் நரேந்திர மோடி 5ஜி தொழில்நுட்பத்தை தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

முதலில் குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டும் 5 ஜி அமலுக்கு வர இருக்கிறது. இரண்டு ஆண்டு காலத்திற்கு பின் 5 ஜி நாடு முழுவதும் அமலுக்கு வர இருக்கிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT