ADVERTISEMENT

“நாடாளுமன்றத் தேர்தலை அதிபர் தேர்தல் போல் நடத்த பிரதமர் மோடி திட்டம்” - கே.எஸ். அழகிரி 

07:20 AM Sep 22, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

திண்டுக்கல் தேனி மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் வாக்குச்சாவடி மற்றும் வட்டார நகர நிர்வாகிகளின் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திண்டுக்கல் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் துரை மணிகண்டன், தேனி மாவட்ட தலைவர் முருகேசன், மேற்கு மாவட்ட தலைவர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு பேசினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசும் போது, “புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்து மோடி தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி உள்ளதாக பெருமைப்பட்டுக்கொள்கிறார். பாராளுமன்றத்தில் மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டாலும் தொகுதி வரையறை முடிந்த பிறகுதான் இது நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தி பேசும் பீகார் மத்திய பிரதேசம் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்க பாஜக சூழ்ச்சி செய்கிறது. மேலும் தனக்கு வாக்கு வங்கி குறைவாக உள்ள தமிழ்நாடு கேரளா போன்ற தென் மாநிலங்களில் பாராளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்கவும் திட்டம் வகுத்துள்ளது. தனக்கு சாதகமான மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பாஜக எடுத்து வரும் முயற்சியை இந்திய கூட்டணி கண்டிக்கிறது.

மகளிர்க்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதில் காங்கிரஸுக்கு மாறுபட்ட கருத்து கிடையாது. ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது. தற்போது பாஜக தனது ஆட்சி நிறைவு காலத்தில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றி அதன் மூலம் வாக்குகளை பெற முடியுமா என திட்டம் வகுத்துள்ளது. ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாமல் தொகுதி மறு வரையறை செய்ய முடியாது அதனால்தான் 33 சதவீத இட ஒதுக்கீட்டில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டுமென ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் வலியுறுத்தி வருகின்றனர்.

வருகிற நாடாளுமன்றத் தேர்தலை அதிபர் தேர்தல் போல் நடத்த மோடி திட்டமிட்டு வருகிறார். காவேரி பிரச்சனையை பொருத்தவரையில் ஆணையமும் உச்ச நீதிமன்றமும் தெளிவாக தீர்ப்பு வழங்கி உள்ளது. எல்லா காலகட்டங்களிலும் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை பங்கீடு செய்து வழங்க அறிவுறுத்தி உள்ளது. அதனால் கர்நாடகா அரசு இதனை பின்பற்றவில்லை. காவேரி பிரச்சனையில் நாங்கள் தமிழக அரசின் நிலைப்பாட்டையே கொண்டுள்ளோம். ஆனால் பாஜக தமிழகத்தில் ஒரு நிலைப்பாட்டிலும் கர்நாடகாவில் வேறு ஒரு நிலைப் பாட்டிலும் உள்ளது என்று கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT