ADVERTISEMENT

தமிழ்நாட்டு தடுப்பூசி முகாம்களிலும் மோடி ஃபோட்டோ! - பாஜகவினர் கோரிக்கை!

05:13 PM Dec 25, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

“இதுதான் உங்க ஊரு நியாயமா?” என்று கேட்ட விருதுநகர் மாவட்ட பாஜக ஊடகப் பிரிவு செயலாளர் ஆறுமுகசாமி சுட்டிக்காட்டிய விவகாரம் இது. விருதுநகர் மாவட்ட பாஜகவினர், மாவட்ட ஆட்சியர் முதல் தமிழ்நாடு சுகாதாரத்துறையினர் வரை முன்வைத்துள்ள கோரிக்கை என்னவென்றால், ‘தமிழகத்துக்குக் கரோனா தடுப்பூசிகளை இலவசமாக வழங்குகிறது மோடி தலைமையிலான அரசு. ஆனால், தமிழ்நாட்டில் தடுப்பூசி முகாம்களில் தமிழக அரசு வைத்திருக்கும் பேனர்களில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி படமும், இந்நாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் படமும் இடம்பெற்றுள்ளன. பிரதமர் மோடி படமும் வையுங்களேன். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் படத்தையும் இடம்பெறச் செய்யுங்களேன்.’ என்பதுதான்.

பாஜகவினரின் இந்தக் கோரிக்கை குறித்து உள்ளூர் அரசியல் பிரமுகர் ஒருவர், “கரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடி படம் இடம்பெற்றுள்ளது. சான்றிதழில் மோடி படத்தை நீக்க வேண்டும் என்று கேரளாவில் வழக்கு தொடுத்த மனுதாரருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு! மோடி படத்தைப் பேனரில் பெரிதாக வைத்தே ஆக வேண்டும் என்று அடம்பிடிப்பதற்கு இது ஒன்றும் டெல்லி அல்ல.” என்றார்.

கரோனாவிலும் அரசியல்தானா?

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT