ADVERTISEMENT

மகளிர் மட்டுமே இயக்கும் நடமாடும் டீ கடை! அசந்துபோன ஐஸ்வர்யா ராஜேஷும், நாசரும்! (படங்கள்)

01:49 PM Feb 29, 2020 | george@nakkheeran.in

ADVERTISEMENT

சென்னை கோடம்பாக்கத்தில் இந்தியாவிலேயே முதல்முறையாக நடமாடும் டீ கடையை (எலக்ட்ரிக் ரெட்ரோஃபிட் ஆட்டோ ரிக்‌ஷா) கில்லி சாய், மாட்டோ எலக்ட்ரிக் மொபிலிட்டியுடன் இணைந்து அறிமுகப்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாதவாறு முழுவதும் மின்சாரத்தில் இயங்கக்கூடிய, முழுவதும் பெண்களால் மட்டுமே இயக்கப்படுகிற ஆட்டோவில் அமைக்கப்பட்டுள்ள இந்த டீ கடையின் துவக்க விழாவில் நடிகர் நாசர், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், வருமான வரி கூடுதல் ஆணையர் நந்தகுமார் ஐஆர்எஸ், விஜிபி தலைவர் விஜிபி சந்தோசம், ஸ்பெயின் கவுன்சில் ஜெனரல் டோனி லோபோ, இயக்குநர் எஸ்.எம்.வசந்த், பர்வீன் டிராவல்ஸ் இயக்குநர் சாதிக் மற்றும் எம் ஆட்டோ தலைவர் மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய நிர்வாக இயக்குனர் முகமது ரஹ்மத்துல்லா “தமிழ்நாட்டில் தேயிலை நுகர்வு என்பது மிகப்பெரியது. டீ கடை இல்லாமல் ஒரு தெருவைக் கண்டுபிடிப்பது மிகவும் அரிதான இந்த சூழலில் ஒரு நிலையான டீ கடையை வைத்திருப்பதை விடவும் இது சிறந்தது. பஸ் ஸ்டாண்டுகள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள், ஐ.டி பூங்காக்கள் மற்றும் சுற்றுலாத் தலங்கள் போன்ற பகுதிகளில் எளிய முறையில் விற்பனை செய்ய இந்த நடமாடும் டீ கடைகள் உதவுகின்றன” என்று கூறினார். தொடர்ந்து பேசிய கில்லி ஹாஸ்பிடாலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனர் வில்லியம் ஜெயசிங், கில்லி சாய் ஒரு வருடத்திற்குள் இதுபோன்ற 50 ரெட்ரோ ஃபிட் ஆட்டோக்களை அறிமுகப்படுத்துவதோடு இந்த அனைத்து விற்பனை நிலையங்களிலும் பெண்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது எனவும், அடுத்த மூன்று ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் தனது கிளைகளைத் துவங்கி 2000 க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்குவதையும் கில்லி சாய் நோக்கமாகக் கொண்டுள்ளது எனவும் குறிப்பிட்டார். இது தவிர, டிரஸ்ட் புரம், பெசன்ட் நகர் மற்றும் பெரம்பூரில் ஒரே நாளில் மற்ற மூன்று மோட்டார் கில்லி சாய் விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன என்றும், தங்கள் கடைகள் அனைத்திலும் பாலின பாகுபாடு இன்றியும், மாற்றுத்திறனாளிகளுக்கும் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்று கூறினார்.

விழாவில் கலந்துகொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட திரை பிரபலங்கள், பெண்கள் மட்டும் இயக்ககூடிய இந்த டீ கடை போன்ற புது முயற்சிகள் பெண்களுக்கான சுயமுன்னேற்றத்தை ஊக்குவிப்பதோடு, அவர்களுக்காக சமூக அங்கிகாரத்தையும் வழங்குவதாக வாழ்த்து தெரிவித்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT