ADVERTISEMENT

ஒரு வாக்கு கூட கிடைக்காத மநீம வேட்பாளரின் பரிதாபம்! 

11:20 AM Feb 22, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகம் முழுவதும் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணி பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதல் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என அனைத்திலும் திமுக கூட்டணி அதிக வார்டுகளில் முன்னிலை வகித்து வருகிறது. மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளில் 21 மாநகராட்சிகளில் திமுக முன்னிலையில் உள்ளது. 138 நகராட்சிகளில் திமுக கூட்டணி 103 இடங்களிலும், அதிமுக 5 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. பேரூராட்சிகளை பொறுத்தவரையில் திமுக கூட்டணி 259 இடங்களில் திமுகவும், 32 இடங்களில் அதிமுகவும் முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக கோவை, சேலம் உள்ளிட்ட இடங்களிலும் திமுக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது.

இந்நிலையில், சிவகங்கை நகராட்சி 1வது வார்டில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் செங்கோல் என்பவர் போட்டியிட்டார். இவர் அத்தொகுதியில் ஒரு வாக்கு கூட வாங்கவில்லை. அதனால், அந்த வார்டில் மநீம டெபாசீட் இழந்தது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT