ADVERTISEMENT

17 கோடியில் தார்சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்த எம்எல்ஏ

09:38 PM Feb 15, 2020 | kalaimohan

சிதம்பரம் நகராட்சியில் கடந்த நான்காண்டுகளுக்கு மேலாக பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்தப் பணிகளுக்காக சாலைகள் தோண்டபட்டது. பின்னர் இதில் சாலைகள் போடப்படாமல் இருந்தது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து நகரத்தின் சில இடங்களில் சாலைகள் போடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

மேலும் பல இடங்களில் சாலை போடாமல் உள்ளதால் மக்கள் பல்வேறு விதங்களில் பாதிப்படைந்து சாலைகளை போட வேண்டுமென தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் ரூ 17 கோடி செலவில் பெரியார் தெரு, அனந்தீஸ்வரர் கோயில் தெரு, திரௌபதி அம்மன் கோவில் தெரு, காசிம் கான் பேட்டை தெரு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தெருக்களில் புதிய தார்சாலை அமைக்கும் பணிகளை சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் துவக்கி வைத்தார். இவருடன் நகராட்சி ஆணையர் சுரேந்தரஷா, நகராட்சி ஒப்பந்ததாரர்கள் சண்முகசுந்தரம், ரஜினிகாந்த் உள்ளிட்ட கட்சியினர் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT