'What did the KILLAI AIADMK MLA do for 10 years- DMK gave leaflets

கிள்ளையில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ பாண்டியன் தலைமையில்திமுக அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது கிள்ளை பேரூராட்சி மன்ற துணைத்தலைவரும், திமுக நகர செயலாளருமான கிள்ளை ரவிந்திரன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட திமுகவினர் அலுவலகத்தில் திரண்டனர். பிறகு கடந்த அதிமுக ஆட்சியில் '10 ஆண்டுகளாக கிள்ளைக்கு என்ன செய்தார் எம்எல்ஏ' என்ற துண்டுப் பிரசுரம் மற்றும் கடந்த 2 ஆண்டுக்கால திமுக ஆட்சியில்கிள்ளை பகுதியில் சுமார் ரூ.80 கோடிக்கு மேல் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது.

Advertisment

நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது என்ற சாதனை பட்டியல் அடங்கிய துண்டுப் பிரசுரத்தை விநியோகம் செய்தனர். மேலும் அதில் 'சிதம்பரம் அதிமுக எம்எல்ஏ மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிய 10 அம்ச கோரிக்கையில் கிள்ளை பேரூராட்சிக்கு எந்த திட்டத்தையும் கேட்கவில்லை' என்று மக்களிடம் ஆதாரத்தோடு நோட்டீஸ் விநியோகம் செய்ததால் கிள்ளையில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் திமுக நகர துணைச் செயலாளர் சத்துருக்கன், மாவட்ட பிரதிநிதி சாமிமலை, வார்டு செயலாளர்கள் மலையரசன், பாண்டியன், சின்னமணி, குமார், ஒன்றிய பிரதிநிதி இளஞ்சேரன் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisment