ADVERTISEMENT

''இ.எம்.ஐ செலுத்த அவகாசம்''-பிரதமர் மற்றும் ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!  

09:30 PM May 12, 2021 | kalaimohan

ADVERTISEMENT

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிற நிலையில், தமிழகத்திலும் கரோனா இரண்டாம் அலை காரணமாக நாளுக்கு நாள் வைரஸ் பாதிப்பும், உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இன்று தமிழகத்தில் ஒரே நாளில் 30,355 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் 293 பேர் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனா உயிரிழப்பு மொத்த எண்ணிக்கை 16,471 ஆக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த சில தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 10-ஆம் தேதி காலை 04.00 மணி முதல் மே 24ஆம் தேதி காலை 04.00 மணிவரை 15 நாட்களுக்குத் தமிழகத்தில் இந்த ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் மூன்றாம் நாளாக இன்று ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இ.எம்.ஐ செலுத்த அவகாசம் கோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கும், ரிசர்வ் வங்கி ஆளுநருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்,'' சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடன் தவணை செலுத்த ஆறு மாதம் அவகாசம் தரவேண்டும். எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் கடன் தவணையை செலுத்த ஆறு மாதம் அவகாசம் வழங்க வேண்டும். ஆறு மாத காலத்திற்கு வட்டி எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது எனவும் அறிவிக்க வேண்டும். தொழிலாளர் வைப்பு நிதி, ஈட்டுறுதி தொகையை 6 மாதங்களுக்கு பிடித்தம் செய்யக் கூடாது'' என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT