ADVERTISEMENT

'கலைஞரின் உடல்நலம் குன்றியதற்கு மு.க.ஸ்டாலினே காரணம்'- மு.க.அழகிரி குற்றச்சாட்டு!

11:01 PM Jan 03, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

மதுரையில் புதிய கட்சி தொடங்குவது குறித்து தனது ஆதரவாளர்களுடனான ஆலோசனைகூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரி,

''என்னை திமுகவில் இருந்து சில துரோகசக்திகள் கலைஞருக்கும், பொதுச்செயலாளர் அன்பழகனுக்கும் தெரியாமலயே என்னை கட்சியில் இருந்து விலக்கிவிட்டார்கள். ஸ்டாலினுக்கு பொருளாளர் பதவி வேண்டும் என என் வீடுதேடி வந்து பரிசீலனை செய்யச் சொன்னார்கள். அதனால் அவர் பொருளாளர் ஆனார். எனக்கு தென்மண்டல அமைப்புச் செயலாளர் பதவி கிடைத்ததால் பொறாமையில் பொருளாளர் பதவி கேட்டார் ஸ்டாலின். 'கலைஞருக்கு பின் நீ தான் எல்லாம்' என ஸ்டாலினிடம் நான் கூறினேன். ஆனால் தற்போது துரோகம் செய்துவிட்டார்.

நான் மத்திய அமைச்சர் ஆனபோது ஸ்டாலின் துணை முதல்வர் வேண்டும் என கேட்டார். உடனடியாக ஒப்புக்கொண்டேன், கட்சிக்காக மட்டுமே நான் பணிபுரிந்தேன். திமுக உறுப்பினர்கள் பட்டியல் என்ற பெயரில் வாக்காளர்கள் பட்டியலில் உள்ள பெயரை காட்டி கலைஞரை ஏமாற்றியதைச் சுட்டிக்காட்டினேன். எனது பிறந்தநாளிற்காக எனது ஆதரவாளர்கள் 'பொதுக்குழுவே வருக' என அடித்த போஸ்டரை காரணம்காட்டி என் மீது நடவடிக்கை எடுக்கவைத்தார்கள். ஸ்டாலினுக்கு திமுகவினர் 'வருங்கால முதல்வரே' என நிரந்தரமாக போஸ்டர் அடித்துவைத்துள்ளார்கள். ஆனால் ஸ்டாலின் கடைசிவரை வருங்கால முதல்வர் தான், முதலமைச்சர் ஆகவே முடியாது. கட்சியில் இருந்து நீக்கிய நிலையில் 7 ஆண்டுகளாக பொறுமையாக இருந்துவிட்டோம். நான் எந்த முடிவு அறிவித்தாலும் அதனை எனது ஆதரவாளர்கள் ஏற்றுகொள்வார்கள்.

2016-தேர்தலில் கலைஞரை கட்டாயப்படுத்தி திருவாரூர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவைத்து, வேண்டுமென்றே அவரை மேடையில் ஏற்றி பிரச்சாரம் செய்யவைத்து அவரின் உடல்நலனை கெடுக்கவைத்துவிட்டார்கள். விரைவில் நல்ல முடிவை அறிவிப்பேன். எதையும் சந்திக்க தயாராக இருங்கள். கலைஞரையே மறந்து தி.மு.க தற்போது செயல்படுகிறது. கலைஞரின் பெயரை நினைவுகூறும் வகையில், உச்சரிக்கும் வகையில் எனது முடிவு அமையும். எனது முடிவு அப்படியும் இருக்கலாம், இப்படியும் இருக்கலாம், எப்படியும் இருக்கலாம். எனது ஆதரவாளர்களுக்கு எதையும் தாங்கும் இதயம் வேண்டும்'' என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT