ADVERTISEMENT

நாங்குநேரியில் எந்த கட்சி? விக்கிரவாண்டியில் எந்த கட்சி? - அறிவித்த ஸ்டாலின்

02:56 PM Sep 21, 2019 | santhoshkumar

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், ஹரியானா ஆகிய மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ளது. இதனால், அந்த 3 மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்படும் என சில வாரங்களாகவே எதிர்பார்க்கப்பட்டது. கூடவே தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி அந்த இரண்டு தொகுதிகளுக்கான தேர்தல் தேதியை தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா இன்று அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்த இரண்டு தொகுதிகளுக்கும் அக்., 21 தேதி தேர்தல் நடத்தப்படுவதாகவும், வாக்கு எண்ணிக்கை அக்., 24 தேதி நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 23 தேதி முதல் வேட்புமனுவை தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு வெளியான நிலையில், அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்ட திமுக பொதுக்குழு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் காங்கிரஸை சேர்ந்த மூத்த தலைவர்கள் அறிவாலயம் விரைந்தனர். அங்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினர். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஸ்டாலின், நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரும் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளரும் போட்டியிடுவார்கள் என தெரிவித்தார்.

மேலும், புதுவையில் அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தலை சந்திக்கும் காமராஜ்நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிடுவார் எனவும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT