ADVERTISEMENT

தம்பியை கொலை செய்த அண்ணன்! விசாரணையில் அதிர்ச்சியான போலீஸ் டீம்!

10:18 PM Aug 01, 2019 | rajavel

விழுப்புரம் மாவட்டம் எலவாசனூர் கோட்டை அருகே காப்பு காட்டில் அயன் குஞ்சரம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மகன் செந்தில் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டான். இந்த வழக்கில் மாணவனின் உடன் பிறந்த அண்ணன் சந்தோஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), சந்தோஷீடன் பிறந்த சகோதரி, சித்தி ஆகிய மூவரை கைது செய்துள்ளது போலீஸ்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

தம்பியை கொடூரமாக அண்ணனே ஏன் கொலை செய்தான்? போலீஸ் விசாரணையில் அவன் கொடுத்த வாக்குமூலம் அறுவறுப்பாகவும் முகம் சுளிக்க வைத்தது.

சந்தோஷின் சித்தப்பா வேலைக்காக கேரளா சென்றுள்ளார். இவரது மனைவி கரும்பு வெட்டும் தொழிலாளியான சந்தோஷீடன் கரும்பு வெட்ட செல்வாராம். இதனால் நாளடைவில் இருவருக்கும் தகாத உறவு ஏற்ப்பட்டுள்ளது. இதனை தற்செயலாக பார்த்துள்ளான் செந்தில். அண்ணன் மீது ஏதாவது கோபம் வந்தால், சித்தியுடன் உனக்கு உள்ள தொடர்பை வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லிவிடுவேன் என்று செந்தில் அவ்வப்போது சொல்வானாம். இதனால் செந்திலை தாஜா செய்து வந்துள்ளான் சந்தோஷ்.

இந்த நிலையில் கடந்த ஞாயிறு அன்று காலையிலேயே தனது சொந்த சகோதரியுடன் சந்தோஷ் தகாத உறவில் இருந்ததை செந்தில் நேரில் பார்த்து விட்டு அறுவெறுப்பும் கோபமும் கொண்டான். தன் அண்ணனை பார்த்து, உன் செயலை இனிமேல் சகிக்க முடியாது. இதை நான் அப்பா அம்மாவிடம் கண்டிப்பாக சொல்லப் போகிறேன் என்று சத்தம் போட்டுள்ளான் செந்தில். தம்பியை சாந்தப் படுத்த முடியாமல் தடுமாரிய சந்தோஷ், இது பற்றி சித்தி மற்றும் சகோதரி ஆகியோரிடம் தனிமையில் விவாதித்தான். அதன்படி மூவரும் சேர்ந்து எடுத்த முடிவு அப்பகுதி மக்களையே பதைபதைக்க வைத்துள்ளது. மூவரும் செந்திலிடம் அன்பாக நயந்து பேசியபடியே வனத்துரை காட்டுக்குள் விறகு ஒடிக்க போகலாம் என்று கூட்டி போனார்கள்.

ஆள் அரவமற்ற காட்டு பகுதிக்குள் கொண்டு போன மூவரும், செந்திலை பெண்கள் இருவரும் திமிராமல் பிடித்து கொள்ள, ஆட்டை அறுப்பது போல் தம்பியின் கழுத்தை அறுத்து துடிதுடிக்க சாகடித்துள்ளான் அண்ணன். பிறகு மூவரும் எதுவும் நடக்காதது போல ஜாலியாக இருந்துள்ளனர்.

மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவினை அடுத்து அந்த ஊரில் உள்ளவர்களின் செல்போன் பயன்பாடுகள் அனைத்தையும் ஆய்வு செய்தனர். இதன் மூலம் ஐந்து நாட்காளில் கொலையாளிகளை கைது செய்துள்ளது போலீஸ். செல்போன் உரையாடல்களை கண்டுபிடித்துள்ள போலீசுக்கு அந்த பகுதியில் தகாத உறவுகள், கள்ள காதல் விவகாரம் உள்ளவர்கள் பற்றிய தகவல்கள் பல கிடைத்துள்ளன. மேலும் தோண்ட தோண்ட முகம் சுளிக்க வைக்கும் விவகாரங்கள் அளவுக்கு உள்ளதாம். கொலை வழக்கை மட்டும் கண்டுபிடித்தது போதும் தோண்டி துருவினால் முடை நாற்றம் வீசும் என்கிறது போலீஸ் தரப்பில்.

இந்த வழக்கை ஐந்து நாட்களில் கண்டுபிடித்த போலீஸ் படையினர், கள்ளக்குறிச்சி கூடுதல் எஸ்.பி. சரவணன் டிஎஸ்பி ராமநாதன், உளுந்தூர்பேட்டை இன்ஸ்பெக்டர் எழிலரசி, மகளிர் இன்ஸ்பெக்டர் விஜி, எடைக்கல் காவல் நிலைய எஸ்ஸை அகிலன், எ.வ.கோட்டை காவல்நிலைய எஸ்ஸை மாணிக்கம், தனிப்பிரிவு ஏட்டுக்கள் மோகன், இளையராஜா ஆகியோர் முன்னிலையில் குற்றவாளிகள் மூவரும் செந்திலை எப்படி கொலை செய்தார்கள் என்ற நிகழ்வுகளை தத்ரூபமாக செய்து காட்டினார்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT