ADVERTISEMENT

'முறையற்ற தொடர்புக்கு இடைஞ்சல்... மிஸ்டுகால் கொலை...'-மனைவியின் பரபரப்பு வாக்குமூலம்!

10:42 PM Aug 23, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தென்காசி மாவட்டத்தின் சுரண்டைப் பக்கம் உள்ள வென்றிலிங்கபுரத்தின் வைரசாமிக்கும், அதன்பக்கமுள்ள வீரசிகாமணியைச் சேர்ந்த முத்துமாரிக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. தம்பதியிருக்குக் குழந்தை இல்லை. இருவரும் வீரசிகாமணியிலுள்ள பர்னிச்சர் பொருட்களைத் தவணை முறையில் விற்பனை செய்யும் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள்.

கடந்த 19ம் தேதி அன்று தம்பதியர் இருவரும் வேலையை முடித்துவிட்டு வீரசிகாமணியின் நடுவக்குறிச்சியின் சமத்துவபுரம் அருகே பைக்கில் வரும்போது காரில் வந்த மர்ம கும்பல் ஒன்று வைரவசாமியைக் கட்டையாலும் கற்களாலும் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்பு அந்தக் கும்பல் முத்துமாரி அணிந்திருந்த 30 கிராம் நகையைப் பறித்துக்கொண்டு தப்பியோடியது. தகவலின்பேரில் சம்பவ இடம் வந்த சேர்ந்தமரம் போலீசார் வைரவசாமியின் உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர்.

இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் எஸ்.ஐ. வேல்பாண்டியன் முத்துமாரியிடம் தீவிரமாக விசாரணை செய்ததில் காதலன் மற்றும் அவரது நண்பர்களுடம் கணவரைத் திட்டமிட்டு கொலை செய்திருப்பதும், அதைமறைக்க நகைக்காகக் கொலை செய்தது போன்று மனைவியே நாடகமாடியது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் முத்துமாரி கொடுத்த வாக்குமூலத்தில், நானும் வைரவசாமியும் ஒரே நிறுவனத்தில் வேலை செய்ததால் மூன்று ஆண்டுக்கு முன் இருவரும் காதலித்து திருமணம் செய்தோம். திருமணத்திற்கு முன்பே வாலிபர் இசக்கிமுத்துவையும் காதலித்து வந்தேன். ஆனால் பெற்றோர் கட்டாயத்தின்பேரில் வைரவசாமியைத் திருமணம் செய்துகொண்டேன். இதன்பிறகும் இசக்கிமுத்துவுடன் பழக்கத்தைத் துண்டிக்க மனம் இல்லாததால் தொடர்ந்து அவருடன் பழகினேன். இது எனது கணவருக்குப் பிடிக்கல. அதனால் அடிக்கடி என்னைக் கண்டித்தார். அதனால் எங்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டது.

அதனால் இசக்கிமுத்து மற்றும் அவரது நண்பர்கள் உதவியுடன் கணவரைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்த நான் வழக்கம் போல் பணி முடிந்து திரும்பும் போது இசக்கி முத்துவிற்கு தகவல்கொடுத்தேன். திட்டப்படி காத்திருந்த அவர்கள் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு பைக்கில் வந்தபோது வழிமறித்துக் கணவரை அடித்துக் கொலை செய்தனர். நகைக்காகக் கொலை செய்வது போன்று இருந்தால் யாரும் கண்டுபிடிக்கமாட்டார்கள் என்று நினைத்தோம். என்னுடைய பதற்றம் காரணமாக போலீசார் விசாரணையில் மறைக்க முடியவில்லை என்றிருக்கிறார்.

இதன்பின் முத்துமாரியைக் கைதுசெய்த போலீசார் வீரசிகாமணியைச் சேர்ந்த இசக்கிமுத்து, நண்பர்கள், காளிராஜ், அங்குராஜ் ஆகியோர் அங்குள்ள மலைப்பகுதியில் பதுங்கியிருந்தபோது அவர்களைக் கைது செய்தனர்.

கைதான இசக்கிமுத்துவோ தான் கொடுத்த வாக்குமூலத்தில், நாங்கள் ஆறு ஆண்டாகக் காதலித்து வந்தோம். ஆனால் முத்துமாரியை அவரது பெற்றோர் வைரவசாமிக்கு திருமணம் முடித்துவிட்டனர். அதன்பிறகும் தொடர்ந்து காதலித்து வந்தோம். எங்கள் காதலுக்கு வைரவசாமி இடையூராக இருந்ததால் அவரைக் கொலை செய்ய திட்டம் போட்டோம். திட்டப்படி அவர்கள் வேலை முடித்துக் கிளம்பியதும் முத்துமாரி எங்களுக்கு மிஸ்டுகால் கொடுத்தார். வழியில் காத்திருந்த நாங்கள் அவர்கள் வருவதையறிந்து அவர்களின் பைக்கை வழிமறித்து வைரவசாமியைக் கட்டையால் தாக்கி கொலை செய்தோம் என்று கூறியதாக தெரிவித்த போலீசார், கைதானவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT