ADVERTISEMENT

குருவிக்காரர்கள் திருவிழாவில் கலந்து கொண்ட அமைச்சர்; மகிழ்ச்சியில் திக்குமுக்காடிய விழாக்குழு  

05:43 PM Aug 13, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் வடக்கு அறிவொளி நகரில் (நரிக்குறவர் காலனி) உள்ள குருவிக்காரர்களின் குலதெய்வமான மதுரை வீரன், காளியம்மன், மீனாட்சி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு சில நாட்களாக தெருவில் மின்விளக்குளால் அலங்கரித்து இரவு கலை நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு பொங்கல் விழா நடந்தது. நேற்று மாலை கீரமங்கலம் மெய்நின்றநாத சுவாமி ஆலயத்திலிருந்து மேளதாளம், வானவேடிக்கை, ஆட்டம் பாட்டத்துடன் பால்குடம் எடுத்துச் சென்றனர். இந்த நிகழ்ச்சியில் உள்ளூர் மற்றும் வெளியூர்களைச் சேர்ந்த நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டனர். இன்று எருமை, ஆட்டுக்கிடாய் வெட்டும் பூஜை நடந்தது. அதற்கான ஏற்பாடுகளை கீரமங்கலம் வடக்கு அறிவொளி நகர் குருவிக்காரர்கள் செய்திருந்தனர்.

மேலும் பல வருடங்களுக்கு பிறகு நடக்கும் திருவிழாவிற்கு அப்பகுதியினர் ஏராளமான பதாகைகள் வைத்துள்ளனர். தி.மு.க.வினர் அமைச்சர் மெய்யநாதன் உள்ளிட்டவர்கள் படங்களுடனும், அ.தி.மு.க.வினர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் படத்துடனும், இளைஞர்கள், நடிகர்கள் படங்களுடனும் பதாகை வைத்து ஆட்டம் பாட்டத்துடன் திருவிழா கொண்டாடி வருகின்றனர். ஆனால் யாருக்கும் அழைப்பு கொடுக்கவில்லை.

இன்று மாலை அமைச்சர் மெய்யநாதன் நாகப்பட்டினம் சென்று கீரமங்கலம் வழியாக அறந்தாங்கி சென்றவர், அறிவொளி நகரில் திருவிழா பதாகையை பார்த்து அங்கு சென்றதும் குருவிக்கார மக்கள் இன்ப அதிர்ச்சியடைந்தனர். திருவிழா கொண்டாடிய பூசாரிகள் திருநீரு அணிவித்தனர். கடந்த சில மாதங்கள் முன்பு இதே பகுதியில் நடந்த திருமணத்திற்கு திடீரென வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அதே போல இன்றும் திடீரென வந்து எங்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் என்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT