ADVERTISEMENT

கொம்பனுக்கு பதில் புதிய காளை.. அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டுக்கு வருகை

12:18 AM Dec 10, 2018 | bagathsingh

ADVERTISEMENT

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கடந்த ஆண்டு முதல் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பில் மோகம் கொண்டு சில காளைகளை வாங்கி வளர்த்து வந்தார். அவரது கொம்பன் என்ற காளை தான் அவருக்கு பெயரை வாங்கிக் கொடுத்து வந்தது. அலங்காநல்லூர், பாலமேடு என்று அத்தனை களத்திலும் நின்று விளையாடி வீரர்களை விரட்டிவிட்டு வெளியே வரும். யாரும் பிடிக்க முடியவில்லை.

ADVERTISEMENT


இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 2 வது வாரத்தில் தனது விராலிமலைத் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் தென்னலூர் பழனியப்பனின் ஊரான தென்னலூரில் ஞாயிற்றுக் கிழமை தொடங்கிய ஜல்லிக்கட்டில் அமைச்சர் இல்லாமல் அவரது காளை மட்டும் கலந்து கொண்டது. மாவட்ட ஆட்சியர் கணேஷ் தொடங்கி வைத்தார். சில காளைகள் வெளியேறிய பிறகு அமைச்சரின் கொம்பன் வருது பிடிச்சு பாருங்க என்று விளம்பரம் செய்ய ஒரு தரப்பு பிடிக்க தயாரானது.. கொம்பனும் படுவேகமாக வெளியே சீறி வந்த வேகத்தில் வாடிவாசலில் உள்ள கல் தூணில் இடித்துக் கொண்டு சுருன்டு விழ ஒட்டு மொத்த வீரர்களும் கொம்பனை தூக்கி சிகிச்சைக்காக கொண்டு செல்ல விழுந்த வேகத்திலேயே இறந்து போனது.


பல களத்தில் நின்று விளையாடிய அமைச்சரின் கொம்பன் தென்னலூரில் விழுந்து இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில். ராப்பூசல் கிராமத்தில் அமைச்சருக்கு சொந்தமான தோட்டத்தில் அமைச்சரின் அப்பா சின்னத்தம்பி, உள்பட பலரும் குமுறி குமுறி அழுது அஞ்சலி செலுத்தி அடக்கம் செய்தனர். வெளிநாட்டில் இருந்து அவசரமாக ஊருக்கு வந்த அமைச்சர் விஜயபாஸ்கர் கொம்பன் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்தி கண்ணீர் வடித்தார்.

கொம்பன்

அந்த கொம்பன் காளையை கைக்குறிச்சி தமிழ்செல்வன் என்பரிடம் இருந்து வாங்கினார் அமைச்சர். கன்றுகுட்டியை திறம்பட பழக்கி யாருக்கும் அடங்காத காளையை உருவாக்கும் தமிழ்செல்வன் 5 ஆண்டுகளுக்கு முன்பு வத்திராயிருப்பில் இருந்து வாங்கி வந்த கன்றுகுட்டி தான் இந்த கொம்பன். கொம்பன் களமிறங்கி மிரட்டுவதை பார்த்த துணை முதல்வர் ஓ.பி.எஸ்., ஜல்லிக்கட்டு தலைவர் பி.ஆர். உள்பட பலரும் ரூ. 30 லட்சம் வரை கேட்டும் கொடுக்காத தமிழ்செல்வன் அமைச்சருக்காக கொடுத்தார். பல களம் கண்டு அமைச்சருக்கு முதலமைச்சர் கையால பரிசு வாங்க வைத்த கொம்பன் களத்திலேயே வீரமரணம் அடைந்திருப்பது அனைவருக்கும் அதிர்ச்சி. அந்த அதிர்ச்சியில் இருந்து மீளாத அமைச்சர் அதே போல வேறு காளையை வாங்கி 2019 ஜனவரியில் தொடங்கும் ஜல்லிக்கட்டுகளுக்கு அனுப்ப வேண்டும் என்று காளைகளை தேடிக் கொண்டிருந்தார்.


இந்த நிலையில் தான் பல மாவட்டங்களிலும் அவர் காளைகளை தேடிக் கொண்டிருக்க அவர் ஊருக்கு அருகிலேயே கொம்பனுக்கு இணையான ஒரு காளை இருப்பதை அறிந்த அவரது ஆதரவாளர்கள் சில நாட்களுக்கு முன்பு பூங்குடி பாலு உள்ளிட்டவர்கள் அந்த காளையை பார்த்தனர். அந்த காளை அமைச்சருக்கு மீண்டும் பெயரை வாங்கிக் கொடுக்கும் என்பதுடன் கொம்பன் போலவே உள்ளது என்று சொல்லும் ர.ர.க்கள் அமைச்சர் இன்னும் காளையை பார்க்கவில்லை. அதனால் அவர் பார்த்து சரி சொன்னால் எவ்வளவு விலை என்றாலும் அந்த காளை அமைச்சரின் ராப்பூசல் கிராமத்து வீட்டில் நிற்கும். சில நாட்களிலேயே அதற்கான பயிற்சிகளும் தொடங்கும். வரும் பொங்கல் முதல் களம் காணும் என்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT