இந்தியாவில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1000ஐ கடந்துள்ளது. கரோனாவிற்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் கரோனால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 42ல் இருந்து 50 உயர்ந்துள்ளது.

minister vijayabaskar about Corona Virus Updates

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது கரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க 15 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது என தெரிவித்தார். பின்னர் கரோனாவுக்கு எதிரான அரசின் நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த அவர், கரோனா குறித்த எந்த சூழலையும் எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது என்றார்.