Advertisment

“பெயர்ச்சொல் என்றில்லாமல் நம் உயிர் சொல் தமிழ்நாடு” - அமைச்சர் உதயநிதி

Minister Udhayanithi wishes TamilNadu day in twitter

Advertisment

மெட்ராஸ் மாகாணத்திற்கு 'தமிழ்நாடு' என முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18 ஆம் தேதி, தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தமிழ்நாடு தினத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது வாழ்த்தைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒரு சட்டமன்ற தீர்மானத்தோடு ஒட்டுமொத்த தமிழ் மக்களின் கனவையும் நிறைவேற்றும் விதமாக தமிழ் நிலப்பரப்புக்கு 'தமிழ்நாடு' என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் பெயரிட்ட நாள் இன்று.

“தமிழுக்கு வெற்றி, தமிழருக்கு வெற்றி, தமிழ் வரலாற்றுக்கு வெற்றி, தமிழ்நாட்டுக்கு வெற்றி..” - முதலமைச்சர் அறிஞர் அண்ணா

Advertisment

முத்தமிழ் அறிஞர் வளர்த்தெடுத்த தமிழ்நாட்டை, தமிழ்நாடாகவே போற்றி பாதுகாக்கும் நம் முதலமைச்சர், இத்தினத்தை தமிழ்நாடு நாள் என்று அறிவித்தார். மாநிலத்தின் பெயர்ச்சொல் என்றில்லாமல் நம் அனைவரின் உயிர் சொல்லாக உயர்ந்து நிற்கும் தமிழ்நாடு வாழ்க. அனைவருக்கும் தமிழ்நாடு நாள் வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.

Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe