ADVERTISEMENT

கோரிக்கை வைத்த மாற்றுத்திறனாளி; அரசு வேலை வழங்கிய அமைச்சர் உதயநிதி

04:56 PM May 10, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி செல்வி பாப்பாத்தி என்பவர் வறுமையில் இருந்து வருகிறார். இந்த நிலையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியை சமீபத்தில் சந்திக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அப்போது, தனது குடும்பம் மிகவும் வறுமை நிலையில் இருப்பதையும், தான் முதுநிலை பட்ட மேற்படிப்பு படித்திருப்பதையும் தெரிவித்து, தனது குடும்ப நிலையைக் கருத்திற்கொண்டு தனக்கு ஏதாவது வேலைவாய்ப்பு வழங்கிடுமாறு கோரிக்கை வைத்தார்.

செல்வி பாப்பாத்தியின் கோரிக்கையை கேட்டறிந்த அமைச்சர் உதயநிதி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வெளிமுகமை மூலம், அலுவலக உதவியாளராக செல்வி பாப்பாத்திக்கு பணி நியமனம் வழங்கிட ஆணையிட்டார். அதனைத் தொடர்ந்து, இன்று (10.05.2023) தலைமைச் செயலகத்தில், செல்வி பாப்பாத்திக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வெளிமுகமை மூலம் அலுவலக உதவியாளராகப் பணிபுரிவதற்கான ஆணையினை வழங்கினார் அமைச்சர் உதயநிதி.

இந்த நிகழ்வில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா ஐ.ஏ.எஸ்., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி ஐ.ஏ.எஸ். ஆகியோர் கலந்துகொண்டனர். பணி நியமனம் பெற்ற பார்வையற்ற மாற்றுத்திறனாளி பாப்பாத்தி, உதயநிதிக்கு கண்ணீர் நிரம்ப நன்றி தெரிவித்துக் கொண்டார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT