AIADMK head office stagnant rainwater... Udayanidhi inspect

Advertisment

சென்னையில் பல்வேறு இடங்களில் தொடர் மழை காரணமாக நீர் தேங்கியுள்ளது. ஆவடி, கொளத்தூர், டி.நகர், கோடம்பாக்கம், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. பிரதான சாலைகளான அண்ணா சாலை, பூந்தமல்லி சாலையில் தண்ணீர் புகுந்துள்ளது. இன்று காலை முதலே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் பல்வேறு இடங்களில் நேரடியாகச் சென்று மக்களைச் சந்தித்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். நிவாரண உதவிகளையும் செய்து வந்தார். கனமழை தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில் திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் எதிரே மழையினால் சாலையில் ஏற்பட்ட பாதிப்புகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதிமுக தலைமை அலுவலகத்தின் முன்பு மழை நீர் தேங்கியுள்ளது குறித்து உதயநிதி ஆய்வுகள் மேற்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.