ADVERTISEMENT

“அமைச்சர் பணி உள்ளதால் நேரில் அஜராக விலக்களிக்க வேண்டும்”- கோரிக்கை விடுத்த மி்ன் துறை அமைச்சர்!

06:18 PM Jul 09, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்த வழக்கில், சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு விலக்கு அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2011-15ஆம் ஆண்டுகளில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி வருவதாக, கூறி கோடிக்கணக்கில் பண மோசடி செய்ததாக கணேஷ்குமார், தேவசகாயம், அருண்குமார் உள்ளிட்டோர் சென்னை காவல் ஆணையரிடம் அளித்த புகார் அளித்தனர்.

ADVERTISEMENT

புகாரின் அடிப்படையில் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை, எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. வழக்கு விசாரணைக்காக செந்தில் பாலாஜி வருகின்ற 15ஆம் தேதி நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மறு ஆய்வு மனு, நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, புகார்தாரர் தரப்பில் இந்த வழக்கில் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க அனுமதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டதால் விசாரணையை வருகின்ற 30ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

அதே சமயத்தில், மனுதாரர் தரப்பில், செந்தில் பாலாஜி அமைச்சராக உள்ளதாகவும், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராக நிர்பந்திக்கப்படுவதால், அமைச்சர் பணியை மேற்கொள்ள இயலவில்லை எனக் கூறி, நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என கோரப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதபதி, வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து செந்தில் பாலஜிக்கு விலக்கு அளித்து உத்தரவிட்டார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT