ADVERTISEMENT

வெள்ள மீட்புப் பணியை துரிதப்படுத்தச் சென்ற அமைச்சர் எம்.சி.சம்பத்!

04:51 PM Dec 02, 2019 | Anonymous (not verified)


வடகிழக்கு பருவமழையின் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர் மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாகவும், நெய்வேலி என்.எல்.சி சுரங்க நீர் வெளியேற்றத்தின் காரணமாகவும் பரவனாற்றில் வெள்ளம் அதிகரித்ததுடன் உடைப்பும் ஏற்பட்டது. இந்நிலையில் அந்தப்பகுதியில் நடைபெற்று வரும் மீட்பு பணியை தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் மற்றும் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் நேரில் சென்று துரிதப்படுத்தினர்.

ADVERTISEMENT



பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எம்.சி.சம்பத், "மழை காலத்தில், பொது மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் போதிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அலுவலர்கள் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர். மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெள்ள தடுப்பு முகாம்களில் தங்கியுள்ள பொது மக்களுக்கு மூன்று வேளையும் உணவு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் எல்லா பகுதிகளுக்கும் ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்களை நிவாரண முகாம்களில் தங்கவைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் வெள்ள பாதிப்புகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இயங்கி வரும் 24 மணி நேர 1077 என்ற எண்ணிற்கு புகார்களை தெரிவிக்கலாம்" என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT