style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அதிமுகவில் முதல்வர்,அமைச்சர், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை கேரள நிவாரண நிதிக்கு அளிக்க இருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது,
ஈரோட்டில் பவானி ஆற்றங்கரையோர குடியிருப்புகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து வசதியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது எனவும்சேதமடைந்த்வீடுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
வீணாக கடலில் கலக்கும் நீரை சேமிக்க ஓய்வு பெற்ற அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அறிக்கை கொடுத்த பின் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஓய்வு பெற்ற தலைமை பொறியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். கோவை மாவட்டம் வால்பாறையில் மழை காரணமாக பாதிக்கப்பட்ட சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றது எனவும் வால்பாறையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உரிய நிவாரணம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். அதுபோல பவானி விவசாய நிலங்களில் வெள்ள நீர் புகுந்த பயிர்கள் சேதமடைந்தது தொடர்பாக, தண்ணீர் வடிந்தவுடன் மாவட்ட நிர்வாகம் கணக்கெடுப்பு நடத்திய பின்னர் உரிய இழப்பீடு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
மேட்டூரில் திறக்கப்பட்ட நீர் இன்னமும் 2 அல்லது 3 தினங்களில் கடைமடை சென்றடையும் எனவும் அவற்றை கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார். கேரளாவிற்கு அரசின் சார்பிலும், பொது மக்களிடம் இருந்தும் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனவும் அனைத்து தரப்பு மக்களும் முன் வந்து அவரவர் சக்திக்கு ஏற்றவாறு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் முதல்வர் கேட்டுக்கொண்டார்.
அதிமுக முதல்வர், அமைச்சர்கள் , சட்டமன்ற உறுப்பினர்கள் , நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரு மாத ஊதியத்தை கேரளா மாநிலத்திற்கு நிவாரணமாக வழங்க உள்ளோம் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.