ADVERTISEMENT

வீடு வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்... 

09:25 AM Mar 13, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவும், கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு முடிந்து தேர்தல் பிரச்சாரம், தேர்தல் அறிக்கை வெளியீடு உள்ளிட்ட பணிகளில் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் பிஸியாக உள்ளன.

இந்நிலையில், அதிமுக சார்பில் மதுரை திருமங்கலத்தில் போட்டியிடும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மறவக்குளம், கப்பலூர், தருமத்துப்பட்டி ஆகிய இடங்களில் வீடு வீடாகச் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது 'அதிமுக அறிக்கையில் மக்களைப் பாதுகாக்கும், மகிழ்ச்சியூட்டும் பல திட்டங்கள் வெளியாக இருக்கிறது' என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT