ADVERTISEMENT

தமிழகத்தில் குரங்கு அம்மையா?-அமைச்சர் மா.சு பேட்டி!

04:46 PM Jul 29, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கரோனாவிற்கு பிறகு உலகத்தை அடுத்தபடியாக அச்சுறுத்தி வருகிறது குரங்கு அம்மை எனும் நோய். பொதுவாக ஆப்பிரிக்காவில் காணப்படும் இந்த வைரஸ் முதன் முதலில் 1958 ஆம் ஆண்டு குரங்குகளிடம் கண்டறியப்பட்டது. மனிதருக்கு இந்த வைரஸ் பாதிப்பு முதல்முறையாக 1970 ஆம் ஆண்டு காங்கோ நாட்டில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் தொற்று 2017 ஆம் ஆண்டு முதல் நைஜீரியா, காங்கோ நாடுகளில் மீண்டும் பரவியது. தற்பொழுது அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த தொற்று பதிவாகி அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

அண்மையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து கேரளா வந்த நபர் ஒருவருக்கு குரங்கு அம்மையின் அறிகுறி கண்டறியப்பட்டுள்ளதாக கேரளா சுகாதாரத்துறை அறிவித்திருந்த நிலையில் தமிழகத்திலும் 4 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர், ''இந்த தகவல் உண்மையல்ல. அரசு அனைத்தையுமே வெளிப்படைத் தன்மையுடன் அணுகிக் கொண்டிருக்கிறது. அரசின் சார்பில் எதையும் மறைக்க வேண்டிய அவசியமில்லை. இதுபோன்ற எந்த யூகங்களுக்கும் நீங்கள் இடம் கொடுக்கக் கூடாது. கனடா மற்றும் யு.எஸ்.ஏ நாட்டில் இருந்து வந்த இருவரின் உடல் நலக்குறைவை கருத்தில் கொண்டு அவர்களது மாதிரிகளை புனே அனுப்பினோம். ஆனால் அவர்களுக்கு குரங்கு அம்மை இல்லை என்று முடிவு வந்துவிட்டது. இதற்காக நாமே ஒரு ஆய்வகத்தையும் தொடங்கிவிட்டோம். ஆசாரி பள்ளத்தில் வந்துச்சு, கன்னியாகுமரியில் வந்துச்சுனு நாமே கற்பனை கதைகளைக் கட்டவிழ்த்து விட வேண்டாம்'' என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT