ADVERTISEMENT

மதுரை மாவட்ட மக்களுக்கு ரூ. 1000 நிவாரணம் கிடைக்குமா? - அமைச்சர் காமராஜ் பதில்!

07:10 PM Jun 23, 2020 | suthakar@nakkh…

ADVERTISEMENT

தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகப்படியான எண்ணிக்கையில், தினமும் உயர்ந்துகொண்டே வருகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் நூற்றுக்கணக்கில் அதிகரித்து வருகின்றது.

ADVERTISEMENT

இதனால் இந்த குறிப்பிட்ட நான்கு மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு வரும் 30 தேதி வரை நடைமுறையில் இருக்கும். இந்நிலையில் இந்த நான்கு மாவட்டங்களில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 வழங்கும் பணி தொடங்கியுள்ளது. ரேஷன் கடை ஊழியர்கள் வீடு, வீடாகச் சென்று அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கத்துடன் கரோனா குறித்த 4 பக்க விளக்கக் குறிப்பும் வழங்குகின்றனர். இந்நிலையில் நாளை முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள மதுரை மாவட்ட மக்களுக்கும் 1000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படுமா என்ற கேள்விக்கு, “1000 ரூபாய் வழங்குவது குறித்து தமிழக முதல்வர் முடிவு செய்வார்” என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT