ADVERTISEMENT

முதல்வர் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டம்; ஆய்வு செய்த அமைச்சர்!

09:47 PM Apr 03, 2024 | ArunPrakash

பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாவட்டம் தோறும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

ADVERTISEMENT

இந்த நிலையில்தான் திண்டுக்கல் திமுக கூட்டணி வேட்பாளரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் மற்றும் தேனி பாராளுமன்ற திமுக வேட்பாளரான தங்கத்தமிழ் செல்வன் ஆகியோரை ஆதரித்து வருகிற 10-ஆம் தேதி தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே இருக்கும் லட்சுமிபுரம் கோர்ட் அருகே தேர்தல் பிரச்சாரம் பொதுக்கூட்டம் மிகப் பிரமாண்டம் அளவில் நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

15 ஏக்கர் பரப்பளவு தேர்தல் பொதுக்கூட்ட மேடை அமைய உள்ளது. இதில் தேனி மாவட்டம் மற்றும் மதுரை மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதியில் உள்ள கட்சிக்காரர்கள் மற்றும் பொதுமக்களும் அதோடு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதியில் உள்ள பொதுமக்களும் கட்சிக்காரர்களும் பெரும் திரளாக கலந்து கொள்ள இருக்கிறார்கள். ஒரு தொகுதிக்கு பத்தாயிரம் பேர் என்று ஒரு லட்சம் பேரை திரட்டி தேனியவே திணற வைக்க வேண்டுமென அமைச்சர் ஐ.பெரியசாமி கட்சிப் பொறுப்பாளர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறாராம். அதற்கான பணிகள் தற்பொழுது அசுர வேகத்தில் நடைபெற்று வருகிறது.

அந்தப் பணிகளைத் தொகுதி பொறுப்பாளரும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அமைச்சரிடம் முதல்வர் பேசும் மேடை அமையக்கூடிய இடத்தையும் மற்றும் பொதுமக்கள் உட்காரக்கூடிய இடங்களையும் பார்வையிட்டதுடன் மட்டுமல்லாமல் வண்டி வாகனங்கள் நிறுத்தக்கூடிய இடங்களையும் பார்வையிட்டு பணிகளை முடுக்கிவிட்டிருக்கிறார்.

அமைச்சருடன் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார், முன்னாள் நகர செயலாளர் செல்லப்பாண்டி, முன்னாள் எம்எல்ஏக்கள் மூக்கையா, லட்சுமணன், வர்த்தக அணி மாநில இளைஞரணி செயலாளரும் போடி பொறுப்பாளருமான ஜெயன் உள்பட கட்சி பொறுப்பாளர்கள் இருந்தனர். அதைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ள டீக்கடைக்குச் சென்ற அமைச்சரும் பொறுப்பாளர்களும் அங்கு தேனீர் அருந்தி விட்டு சென்றனர்

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT