ADVERTISEMENT

அமைச்சர் ஐ. பெரியசாமிக்கு எதிரான வழக்கு; தீர்ப்பு தேதி அறிவிப்பு

11:54 PM Feb 23, 2024 | prabukumar@nak…

கடந்த 2006 - 2011 ஆம் ஆண்டு வரை வீட்டு வசதித்துறை அமைச்சராக ஐ. பெரியசாமி இருந்த போது 2008 ஆம் ஆண்டு தமிழக வீட்டு வசதி வாரிய வீட்டை ஒதுக்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அமைச்சர் ஐ. பெரியசாமி மீது லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் 2012 ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது.

ADVERTISEMENT

இதற்கிடையே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என அமைச்சர் ஐ பெரியசாமி எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் அமைச்சர் ஐ. பெரியசாமி மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள் இல்லை எனக்கூறி கடந்த ஆண்டு மார்ச் மாதம் விடுவித்திருந்தது. இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமைச்சர் ஐ. பெரியசாமிக்கு எதிரான வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.

ADVERTISEMENT

அப்போது அமைச்சர் ஐ. பெரியசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார் ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். மேலும் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ். ராமன் ஆஜராகி வாதிட்டார். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த பிறகு தீர்ப்புக்காக வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் வரும் 26 ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படுகிறது

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT