/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/hc-entrance-file.jpg)
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட இரு நீதிபதிகள் நாளை பதவியேற்கின்றனர்.
அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்தவிவேக் குமார் சிங், தெலங்கானா உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த எம்.சுதீர் குமார் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதனையடுத்து பணியிட மாற்றம் செய்யப்பட்ட நீதிபதிகள் இருவரும் நாளை (23.11.2023) மாலை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்க உள்ளனர். இவர்கள் இருவருக்கும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
இந்த பணியிட மாற்றத்தின் மூலம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளின் காலி இடங்களின் எண்ணிக்கை 9 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)