ADVERTISEMENT

“மேகதாது அணை பிரச்சனை தொடர்பாக சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை” - அமைச்சர் துரைமுருகன்

12:51 PM Jun 02, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT


வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் வேலூர் மாவட்ட குடிநீர் திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் ஜீன் 1ஆம் தேதி நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், வேலூர் மாவட்டத்தில் தற்போது காவிரி குடிநீர் , பராமரிப்பு காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் நாளை முதல் துவக்கப்பட உள்ளது. எனவே மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாதவாறு மாற்று ஏற்பாடுகளை செய்ய மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மக்களுக்கு தங்கு தடை இன்றி குடிநீர் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

காவிரியில் மேகதாது மட்டும் பிரச்சனை அல்ல, நான் இதை 30 ஆண்டுகளாக கூர்ந்து கவனித்து வருகிறேன், காவேரி தொடர்பான தீர்ப்பாயத்தை நடத்திய அனுபவம் தனக்கு உண்டு. காவிரியில் இருந்து எவ்வளவு தண்ணீர் தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்பதற்காக அமைக்கப்பட்ட தீர்ப்பாயத்தில் பிரச்சனை எழுப்பவில்லை. உச்சநீதிமன்றத்திலும் இப்பிரச்சனை எழுப்பவில்லை. எனவே கர்நாடகா துணை முதலமைச்சர் ஏதோ ஒரு பிரச்சனை எழுப்ப வேண்டும் என்பதற்காக பேசி வருகின்றார். எக்காரணத்தைக் கொண்டும் தமிழக அரசு மேகதாது பிரச்சனையை ஒரு போதும் விட்டுக் கொடுக்காது. இந்த பிரச்சனையில் தமிழக அரசு உறுதியாக இருக்கும்.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் உள்ள மலைப்பகுதியில் அப்பகுதி மக்களின் நலன் கருதி சாலை அமைக்க வனத்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் அப்பகுதியில் சாலை அமைக்கப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT