ADVERTISEMENT

சைலோ மூலம் நெல் பாதுகாப்பு குறித்து ஆஸ்திரேலிய நிறுவனத்துடன் அமைச்சர் சக்கரபாணி ஆலோசனை!

12:33 PM Jun 26, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் தலைமைச் செயலகத்தில் ஆஸ்திரேலிய நிறுவனத்துடன் உணவு மற்றும் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி ஆலோசனை நடத்தினார்.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது உணவு மற்றும் வழங்கல்துறை சார்பில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள எருக்கூரில் ரூபாய் 64.27 கோடி செலவில் சைலோ மூலம் 50 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் சேமிப்பு கிடங்குகள் உருவாக்கப்பட்டது. ஆனால், அதை சரிவர கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பராமரிப்பு செய்யாமல் வெறும் 5 ஆயிரம் மெட்ரிக் டன் மட்டுமே சேமித்து வந்தனர்.

இந்த நிலையில்தான், கடந்த ஓராண்டுக்கு முன்பு மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்றவுடன் உணவு மற்றும் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி மூலமாக தமிழகம் முழுவதும் உள்ள நுகர்பொருள் வாணிப கழகங்களை ஆய்வு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதை தொடர்ந்து தான் அமைச்சர் சக்கரபாணியும், தமிழகம் முழுவதும் உள்ள நுகர்பொருள் வாணிப கழங்களை ஆய்வு செய்தார். அப்போதுதான் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள எருக்கூரில் இருக்கும் சைலோ நெல் சேமிப்பு மையம் சரிவர செயல்படவில்லை என்று தெரிந்தது. அதைதொடர்ந்து தான் அமைச்சர் சக்ரபாணியும் இதனை முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

இந்த நிலையில்தான் தலைமைச் செயலகத்தில் இன்று உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த உணவு தானியங்கள் பதப்படுத்தும் சைலோ (SILO) தொழில் நுட்பத்தில் மிக அனுபவம் பெற்ற Kotzur PTY LTD. நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆண்ட்ரூ கொட்சூர் மற்றும் NTC குழுமத் தலைவர் முனைவர் சந்திரமோகன் மற்றும் இந்திய SILO தயாரிப்பு நிறுவனமான NTC Tanshu-வின் இயக்குனர்கள் நரேஷ் கௌஷிக், சக்திவேல், டேவிட் (ஆஸ்திரேலியா) ஆகியோர் சந்தித்தனர்.

அதன்பின் அமைச்சர் சக்கரபாணி தலைமையில் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. அதில் தமிழகத்தில் உணவு தானியங்கள் பாதுகாப்பாக சேமித்து வைக்கும் முறையில் உள்ள சவால்கள் மற்றும் சைலோ மூலம் முழுமையாக சேமித்து வைப்பதற்கு நிரந்தர தீர்வுக்கான ஆலோசனையும் நடைபெற்றது

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT