ADVERTISEMENT

தமிழக அரசின் உத்தரவை காற்றில் பறக்கவிட்ட நுண்கடன் நிறுவனங்கள்; பதறும் கிராமப்புற மக்கள்.!

12:42 PM May 12, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழக அரசின் உத்தரவுகளை மீறி கரோனா ஊரடங்கு காலத்திலும் சுய உதவிக்குழு நுண்கடன் நிறுவனங்கள், கட்டாய வசூல் வேட்டையில் ஈடுபடும் காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவுகிறது. கரோனா தாக்கத்தின் இரண்டாம் அலை வேகமெடுத்து பலதரபட்ட மக்களையும் நடுங்கச் செய்துள்ளது. புதிதாக முதல்வர் பொறுப்பேற்றிருக்கும் திமுக தலைவர் ஸ்டாலினும் அதிரடியான அறிவிப்புகள் மூலம் மக்களைக் கரோனாவில் இருந்து காக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறார்.

அதன் ஒருபகுதியாக, தமிழகத்தில் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் வங்கிகள், சுயஉதவிக் குழுக்களுக்குக் கடன் வழங்கியுள்ள நுண்கடன் நிறுவனங்கள் (மைக்ரோ ஃபைனான்ஸ்) வசூல் வேட்டையில் ஈடுபடக்கூடாது எனவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வேலையின்றி தினசரி வாழ்க்கையை நகர்த்தவே தடுமாறிவரும் சாமானிய மக்களின் நிலையை உணர்ந்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு முதற்கட்டமாக இரண்டாயிரம் ரூபாய் வழங்கிவருகிறது. இந்த நிலையில், தமிழக அரசின் உத்தரவைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டு நாகையில் ஊரடங்கு காலத்திலும் வசூல் வேட்டையில் ஈடுபடுகின்றனர் நுண்கடன் நிறுவனங்கள்.

நாகை தியாகராஜபுரம் பகுதிக்கு இன்று (12.05.2021) காலை வந்த ‘கிராம விடியல்’ நிறுவன ஊழியர்கள், அப்பகுதி மக்களைப் பணம் கட்டச் சொல்லி நிர்பந்தம் செய்துள்ளனர். கரோனா விதிகளை மீறி முகக்கவசம் அணியாமல் அப்பகுதி மக்களை ஒன்றுகூட்டி குழு கூட்டம் நடத்தும் அந்த நிறுவன ஊழியரின் செயலை, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் படம்பிடித்து வெளியிட்டுள்ளனர். இதேபோல நாகையை அடுத்துள்ள வெங்கிடாங்கால் பகுதியைச் சேர்ந்த தமிழ் என்பவரிடம் L&D சுய உதவிக்குழு நிறுவன ஊழியர் பேசும் ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல திருமருகல் ஒன்றியம் அம்பல் ஊராட்சி காமராஜர் தெருவில் எக்விடாஸ் நுண்கடன் நிறுவன ஊழியர்கள் இன்று காலை வசூல் வேட்டையில் ஈடுபட்டதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாழ்வாதாரம் இழந்து வீட்டில் உள்ள கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT