ADVERTISEMENT

'அரசு உதவிபெறும் மாணவருக்கும் 7.5% உள் இடஒதுக்கீடு தேவை' -உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு!

12:35 PM Nov 05, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இடஒதுக்கீட்டை தமிழக அரசு வழங்கியுள்ளது. இதனால் தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்விற்கான அறிவிப்பை மருத்துவ கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. மேலும் மருத்துவ கலந்தாய்விற்கான விண்ணப்பதிவும் தொடங்கியுள்ளது.

ADVERTISEMENT

இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ப்ரீத்தி என்பவர் சார்பில் வழக்கறிஞர் பினைகாஷ், 7.5% உள் இடஒதுக்கீட்டில் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களையும் சேர்க்க நடவடிக்கை எடுக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு செய்திருந்தார்.

இதனையேற்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, முறையீட்டை மனுவாக தாக்கல் செய்தால், வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT