ADVERTISEMENT

மருத்துவ கலந்தாய்வில் 11 புதிய அரசு கல்லூரிகளைச் சேர்க்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு...

10:56 AM Nov 28, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

மருத்துவ கலந்தாய்வில் 11 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளைச் சேர்க்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த வாசுதேவா என்பவர், மருத்துவ கலந்தாய்வில் 11 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளைச் சேர்க்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது மனுவில், '11 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளை நடப்பு கலந்தாய்வில் சேர்க்காதது ஏற்கத்தக்கதல்ல. 11 கல்லூரிகளைச் சேர்த்தால் இட ஒதுக்கீடு சதவீதம் அதிகரித்து பல மாணவர்கள் பயனடைவர். எனவே, 2020- 2021- ஆம் ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வில் 11 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளைச் சேர்க்க வேண்டும்' என கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT