ADVERTISEMENT

மயிலாடுதுறையில் 27 ஆண்டுகளுக்கு பிறகு அதிமுகவை வச்சி செய்த திமுக

01:47 PM May 23, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் விறுவிறுப்படைந்துள்ளது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்குமான வாக்கு எண்ணிக்கையும் இன்று நடந்து வருகிறது. அக்னி வெயிலையும் தாண்டி அனல்அடித்துக் கொண்டிருக்கிறது தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள்.

ADVERTISEMENT

ராமலிங்கம்

புதுச்சேரி தமிழகம் உள்ளிட்ட 40 நாடாளுமன்ற தொகுதிகளில் முக்கியமான தொகுதிகளுல் ஒன்றாக பேசப்பட்டுவந்த மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில் 27 ஆண்டுகளுக்கு பிறகு திமுக நேரடியாக அதிமுகவை எதிர்த்து போட்டியிட்டது. 2008 ம் ஆண்டு நடந்த தொகுதி மறு சீரமைப்புக்கு பிறகு மயிலாடுதுறை, திருவிடைமருதூர், பூம்புகார், சீர்காழி, பாபநாசம், கும்பகோணம், ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியுள்ள இத்தொகுதியில், பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர், ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளும் தஞ்சை மாவட்டத்திலும். பூம்புகார், மயிலாடுதுறை, சீர்காழி, ஆகிய சட்டமன்ற தொகுதிகள் நாகை மாவட்டத்திலும் உள்ளது. 39 மக்களவை தொகுதியில் 28 வது தொகுதியாக இருக்கும் மயிலாடுதுறை தொகுதியில். 7 லட்சத்து 34 ஆயிரத்து 764 ஆண் வாக்காளர்கள் 7 லட்சத்து 49 ஆயிரத்து 534 பெண் வாக்காளர்களையும் 50 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 14 லட்சத்து 84 ஆயிரத்து 348 வாக்குகளை கொண்டுள்ளது.

செந்தமிழன்

மயிலாடுதுறை தொகுதியில் 73.56 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. திமுகவின் சார்பில் ராமலிங்கமும், அதிமுக சார்பில் ஆசைமணியும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் செந்தமிழன் என மொத்தம் 27 வேட்பாளர்கள் தேர்தல் களத்தை சந்தித்தனர். இதில் 6 வேட்பாளர்கள் அரசியல் கட்சிகளின் சார்பில் போட்டியிட்டனர். மீதமுள்ள 21 வேட்பாளர்கள் சுயேட்சையாகவே களம் கண்டன. இரண்டாம் கட்டமாக கடந்த மாதம் 18 ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு என்னிக்கை இன்று 23-ஆம் தேதி நடந்துகொண்டிருக்கிறது.

இதில் ஆரம்பம் முதலே திமுக வேட்பாளரான ராமலிங்கம் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார். இவரே கிட்டத்தட்ட வெற்றி பெறுவார் என உறுதி செய்யப்பட்டுவிட்டது. கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வின் சார்பில் போட்டியிட்ட பாரதிமோகன் 5 லட்சத்து 13 ஆயிரத்து 729 வாக்குகள் பெற்று மனிதநேய மக்கள் கட்சியை தோற்கடித்து 27 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திமுக மயிலாடுதுறை மண்ணில் அதிமுகவை எதிர்த்து போட்டியிட்டு வச்சி செய்துள்ளது." என்கிறார்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT