ADVERTISEMENT

காவு கேட்கும் பாதாளசாக்கடை; பீதியில் மயிலாடுதுறை மக்கள்!

05:11 PM Sep 29, 2019 | kalaimohan

மயிலாடுதுறை நகரத்தில் பாதாளசாக்கடை பனிரெண்டாவது முறையாக உள்வாங்கியிருப்பது பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் பெருத்த கவலைக்கு தள்ளியிருக்கிறது.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் கடந்த 2009 ஆம் ஆண்டு 42 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டது. திட்டம் துவங்கப்பட்ட நாள் முதலிலிருந்தே அதில் ஊழல் மலிந்திருப்பதாக அவ்வப்போது புகார்கள் எழுந்தபடியே இருந்தது. பாதாள சாக்கடை திட்டத்தின் படி " கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து அதில் புல் வளர்ப்போம்," என்றனர் இதற்காக ஆறுபாதி கிராமத்தில் சுத்திகரிப்பு நிலையமும் கழிவு நீரை கொண்டு செல்ல எட்டு இடங்களில் பம்பிங் ஸ்டேஷனும் அமைக்கப்பட்டன. ஆனால் இன்று அத்தனையும் படு மோசமாகி முடங்கி கிடக்கிறது. வீதிக்கு வீதி பாதாள சாக்கடை உடைப்பு ஏற்பட்டு நடைபாதை வாசிகளையும், வாகன ஓட்டிகளையும் திணறடித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தநிலையில் மயிலாடுதுறை தரங்கம்பாடி, நாகை சாலையில் திடீரென்று உருவான பள்ளம் நகரத்தை மட்டுமின்றி நாகை மாவட்டத்தையே கதிகலங்கச் செய்தது. அதை சரி செய்வதற்குள் திருவாரூர் மயிலாடுதுறை சாலையில் உள்வாங்கி பெரும்பள்ளம் ஏற்பட்டது. அதை மூடி சரி செய்யவே இருபது நாட்கள் எடுத்துக் கொண்டனர் அதிகாரிகளும், ஆளும் கட்சியினரும். அது முடிந்து அடுத்த இரண்டு நாட்களிலேயே 12 வது முறையாக மீண்டும் திருவாரூர் சாலையில் கண்ணார தெரு பகுதியில் மீண்டும் பாதாளசாக்கடை உள்வாங்கியுள்ளது. அந்த வழி பிரதான சாலை என்பதால் போக்குவரத்து முற்றிலுமாக தடை பட்டது, பொதுமக்களும் போக்குவரத்து வாசிகளும் பெருத்த இன்னலுக்கு ஆளாகி இருக்கின்றனர்.

இதுகுறித்து நகரத்தில் உள்ள முக்கிய பிரமுகர் ஒருவரிடம் விசாரித்தோம் ," மயிலாடுதுறை பாதாள சாக்கடை திட்டம் கொண்டுவரப்பட்டு பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஆரம்பத்தில் இருந்தே குழப்பம்தான், அப்போதில் இருந்தே கழிவுநீர் மூடிவழியாக வெளியேறியபடித்தான் இருக்கிறது. ஆனால் தற்போது கழிவு நீரை கொண்டு செல்லும் ஷங்ஷன் எதுவுமே முழுமையாக வேலை செய்யவில்லை. கழிவுநீர் கொண்டு செல்லும் குழாய்கள் அனைத்திலும் விரிசல் ஏற்பட்டு பழுதடைந்து விட்டன. சுத்திகரிப்பு நிலையங்களில் உள்ள குளங்களில் ஒன்று முழைமையாக துந்து போய்விட்டது. இப்பவே இப்படி உள்வாங்குது, வரும் மழை காலத்தில் எந்தெந்த இடத்தில் பெரும் பாதிப்பை உருவாக்கப் போகிறதோ புரியல. இதுவரை நகராட்சி நிர்வாகம் பாதிப்புக்கான இடங்களை கண்டு பிடிக்கவே இல்லை. பெருத்த உயிர் சேதத்தை ஏற்படுத்தும் அபாயம் கூட இருக்கிறது." என்கிறார் கவலையுடன்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT