ADVERTISEMENT

தீப்பெட்டி ஆலைகள் மூடல்: 6 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகப் பாதிப்பு - என்ன காரணம்? 

09:01 AM Apr 06, 2022 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

மூலப்பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூடப்பட்டன.

மூலப்பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தீப்பெட்டி தொழிற்சாலைகள் இன்று முதல் ஏப்ரல் 17வரை மூடப்படுகின்றன. 50 முழுநேர ஆலைகள், 300 பகுதிநேர ஆலைகள், 2000 பேக்கிங் ஆலைகள் மூடப்பட்டுள்ளதால் ரூ.30 கோடி வரையிலான உற்பத்தி பாதிக்கப்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல, 6 லட்சம் தொழிலாளர்கள் இந்த ஆலை மூடலால் நேரடியாக பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

மூலப்பொருட்களின் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தீப்பெட்டி தொழிற்சாலை உரிமையாளர்கள், சீனாவில் இருந்து இந்தியாவிற்கு வரும் கேஸ் லைட்டர்களை தடை செய்ய வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT