ADVERTISEMENT

சுனாமியில் இருந்து மீட்கப்பட்ட பெண் குழந்தை... தமிழக சுகாதாரத்துறை செயலாளர் தலைமையில் நடைபெற்ற திருமணம்!

09:57 AM Feb 07, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சுனாமி பேரலையில் இருந்து மீட்கப்பட்டு தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் அரவணைப்பில் வளர்ந்த சௌமியாவிற்கு நாகையில் திருமணம் நடைபெற்றது.

கடந்த 2004- ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலையில் மீட்கப்பட்டு, அரசால் தொடங்கப்பட்ட அன்னை சத்தியா இல்லத்தில் வளர்ந்த 9 மாத குழந்தை சௌமியா மற்றும் மூன்று மாத குழந்தை மீனா ஆகிய இருவரையும் நாகை மாவட்ட ஆட்சியராக இருந்த டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தத்தெடுத்து வளர்த்தார். சென்னைக்கு பணி மாறுதலில் சென்றாலும் மாதந்தோறும் நாகை வந்து குழந்தைகளோடு நேரம் செலவிட்டு, அவர்களின் கல்வி மற்றும் வளர்ச்சியில் பங்களிப்பைச் செலுத்தி வந்தார்.

சௌமியா மற்றும் மீனா ஆகிய இருவரும் 18 வயதைக் கடந்த நிலையில், நாகையைச் சேர்ந்த மலர்விழி- மணிகண்டன் தம்பதியினர் தத்தெடுத்து வளர்த்து வந்தனர். இந்த நிலையில், தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் சௌமியாவிற்கு திருமணம் நடைபெற்றது. இதில் நாகை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT